தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய தினத்தின் அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா?.. வாங்க பார்க்கலாம்! - TODAY RASIPALAN IN TAMIL

ஜனவரி எட்டாம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Getty Image)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2025, 6:41 AM IST

மேஷம்: இன்றைய தினத்தில் குடும்பத்தினர் மற்றும் மனதிற்குப் பிடித்தவர்கள் மூலமாக சந்தோஷமும், வளமும் கிடைக்கும். எதுவும் இலவசமாக கிடைக்காது, அதற்காக நீங்கள் சிறிய அதிர்ஷ்டம் ஒன்றை நழுவவிடலாம். ஆனாலும், எல்லாம் நன்மைக்கே. காதல் துணையுடன், குதூகலமாக நேரத்தை கழிப்பீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவர் என்றால், எவரேனும் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்க்கக்கூடும்.

ரிஷபம்: இன்றைய தினம், வளங்கள் தொடர்பான விஷயங்களில் ஒரு பொன்னான வாய்ப்புகளை கொண்டு வரும் நாளாக இருக்கும். உடல் நலமும், பொருள் ஆதாயமும் உங்களுக்கு கிடைக்கும். நகை பரிமாற்றம் காரணமாக உறவுகள் புதுப்பிக்கப்படலாம். ஆனால், நீங்கள் ஏமாற்றப்படும் சாத்தியம் இருப்பதால் கவனமாக செயல்படவும்.

மிதுனம்: உங்களது செய்கை ஆளுமைப் பண்பை நிர்ணயிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். மற்றவர்கள், உங்களைப் பற்றி தவறாக நினைக்கக் கூடிய வாய்ப்புள்ளது. நீங்கள் மற்றவர்களிடம் இருந்து சிறிது ஒதுங்கி இருந்து, நேரத்தைத் தனிமையில் செலவழிப்பது பயனைத்தரும். அதுதவிர, உங்களது எதிர்பாலின நண்பரை மகிழ்விக்க, அதிக பணம் செலவழிப்பீர்கள்.

கடகம்:சமூகப் பொறுப்புகள் மீது, உங்கள் கவனம் திரும்பும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை நன்றாக இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். மதிய நேரத்தில், நீங்கள் தனிமையில் நேரம் கழிக்க விரும்பலாம். மாலைப் பொழுதில், உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மத்தியில் நீங்கள் முக்கியத்துவம் பெறக்கூடும்.

சிம்மம்: சதி நடவடிக்கைகள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை தவிர்க்கவும். உங்கள் கிரக நிலைகள் காரணமாக, நீங்கள் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. பணியை பொருத்தவரை, அமைதியை கடைப்பிடிக்கவும். நாளின் முடிவில், உங்களுக்கு பிரச்சனை கொடுத்துவந்த சில கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும். நீங்கள் அமைதியாக இருந்தால், அனைத்து பிரச்சனைகளும் தானே தீர்ந்துவிடும்.

கன்னி: நிதி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி, லாபம் ஈட்ட முயற்சி செய்வீர்கள். வருங்கால திட்டங்களையும், நெருக்கடி வந்தால் சமாளிப்பதற்கான திட்டங்களையும் வகுப்பீர்கள். சில ஆவணங்கள், உங்கள் வருங்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் வகையில் இருக்கும் என்று கிரக நிலைகள் தெரிவிக்கின்றன.

துலாம்: இன்றைய தினம், அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். சட்டரீதியான பிரச்சினைகள், நீதிமன்றத்திற்கு வெளியே விரைவில் தீர்க்கப்படும் சாத்தியம் உள்ளது. மாலையில், நீங்கள் மற்றவர்களின் கருத்துக்கு ஒத்துப் போகாத நிலை ஏற்படலாம். தனிப்பட்ட உறவுகளைப் பொறுத்தவரை, நீங்கள் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: இன்றைய தினத்தில், சிறந்த நபர்களுடன் நேரம் கழிக்கும் வாய்ப்பிருப்பதால், உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்களுக்கு இன்று வேலை அதிகம் இருக்கும். திட்டமிட்டு கவனத்துடன் செயல்படவும், ஏனென்றால் அதிக வேலை காரணமாக, உடல் நலம் பாதிக்கப்படலாம். ஆனால் பொதுவாக, உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவழிக்கிறீர்கள் என்பதால், குதூகலம் மற்றும் உற்சாகம் நிறைந்திருக்கும்.

தனுசு: இன்றைய தினத்தில், காதல் அனுபவம் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீங்கள் நெடுநாட்களாக முடிக்காமலிருந்த பணியை, இன்று மிக எளிதாக நிறைவு செய்து விடுவீர்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், உங்களுக்கு பொதுவாக இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

மகரம்:எதிர்பார்ப்புகள் காரணமாக மகிழ்ச்சி, சோகம் ஆகிய இரு உணர்வுகளும் ஏற்படும். நீங்கள் மற்றவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் அதே சமயத்தில், மற்றவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை நீங்கள் நிறைவேற்ற இயலாமல் இருக்கும். உங்களது கருத்துக்களை செயல்படுத்த, நீங்கள் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும். நீங்கள் குறைவாக செலவழிக்க விரும்பலாம், ஆனால் செலவு சிறிது அதிகரிக்கும்.

கும்பம்: இன்றைய நாளின் தொடக்கத்தில், சிறந்த வகையில் பணியில் ஈடுபடுவதற்கான சக்தி இல்லாததைப் போல் உணரக்கூடும். ஆனால், விரைவில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் இருக்கும் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, எச்சரிக்கையுடன் செயல்பட்டு, குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டும்.

மீனம்:இன்று வர்த்தகத்தில் கவனம் செலுத்துவதுடன் கூடவே, குடும்பத்தினருடன் நல்ல முறையில் நேரத்தை செலவிடுவீர்கள் என்று உங்களது கிரக நிலைகள் தெரிவிக்கின்றன. இன்று முழுவதும் உங்களுக்கு அனுகூலமான நாளாகவே இருக்கும். பணியைப் பொருத்தவரை, உங்களுக்கு ஒரு வித்தியாசமான குதூகல அனுபவம் கிடைக்கலாம். நல்லவை நடக்கும் என்று நம்புவதில் எந்தவித தவறும் இல்லை.

ABOUT THE AUTHOR

...view details