தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: நெடுநாள் ஆசை நிறைவேறும்.. அதிர்ஷ்ட ராசிக்காரர் நீங்களா? - Today Rasipalan in Tamil - TODAY RASIPALAN IN TAMIL

Today Rasipalan in Tamil: ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

Today Rasipalan in Tamil
Today Rasipalan in Tamil

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 6:51 AM IST

மேஷம்:உள்ளுணர்வின் அடிப்படையில் இன்று செயல்படுவீர்கள். அதனால், அனைத்து திட்டங்களையும் சிறந்த வகையில் அமைப்பீர்கள். மகிழ்ச்சியான மனநிலையில் காணப்படுவீர்கள். எனினும், சிறிது ஏமாற்றம் ஏற்படக்கூடும். ஆனால், அது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.

ரிஷபம்:கனவுகளில் மிதந்து கோட்டை கட்டுவதை விட, நடைமுறைக்கு ஏற்றவகையில் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரியிடமிருந்து நெருக்குதல் இருக்கலாம். அவர் பணியை வேறுவிதமாக செய்யும்படி உத்தரவிடலாம். எந்த முடிவையும் மேற்கொள்வதற்கு முன்னால், நன்றாக சிந்தித்து செயல்படுங்கள்.

மிதுனம்:இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் திருப்திகரமான நாளாக இருக்கும். உங்களது தினசரி பணிகளுடன் கூடவே, வீட்டு பணிகளிலும் கவனம் செலுத்துவீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. திருமணம் மற்றும் கூட்டாளித்துவம் போன்ற விஷயங்களில் உங்களுக்கு இரட்டை மனநிலை இருக்கும். ஏதேனும் விற்க வேண்டும் என்றால், அதற்கு இன்று உகந்த நாளாகும்.

கடகம்:இன்றுபல வகையான பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வீர்கள். அவற்றை மிகவும் உற்சாகத்துடன் செய்வீர்கள். அதனால், பணிகள் எளிதாக நிறைவேறும். மிகவும் கடினமான பணிகளைக் கூட, கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடித்து விடுவீர்கள்.

சிம்மம்:இன்று குதூகலமான நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உற்சாகத்துடன் செய்வீர்கள். அலுவலகத்தில், பணியில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் உழைப்பிற்கான பலன் கிடைக்குமா? என்ற கவலை உங்களுக்கு இருக்கும். ஆனால், நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே பலன்களைப் பெறுவீர்கள்.

கன்னி: தத்துவங்கள் மற்றும் நடைமுறை விஷயங்கள் கலந்த நாளாக இன்று இருக்கும். நீங்கள் மனிதாபிமானம் மிக்கவர் என்ற பாராட்டைப் பெறுவீர்கள். மேற்கொண்ட திட்டங்கள் வெற்றி அடைய, முழு முயற்சியினை மேற்கொள்வீர்கள்.

துலாம்:இன்று வேலை அதிகம் இருக்கும். அதன் காரணமாக, எரிச்சலான மனநிலையில் இருப்பீர்கள். சூழ்நிலைகளின் காரணமாகவும், வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கவலை காரணமாகவும், உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். ஆனால், இந்த சூழ்நிலையை நீங்கள் மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம்.

விருச்சிகம்:இன்று கடுமையாக உழைப்பீர்கள். அதோடு கூடவே, புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்வது நல்லது. வீட்டு வேலைகளில் ஈடுபட, உகந்த நாளாக இருக்கும். தோட்டம், சமையல் மற்றும் சுத்தம் என மன விருப்பப்படி வீட்டு வேலைகளில் ஈடுபடவும். குடும்பத்தின் மூலம் கிடைக்கும் சந்தோஷங்கள், வேலை தொடர்பான கவலைகளை நீக்கும்.

தனுசு:மனநிலையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு, உங்கள் தோற்றத்திலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களது புதுமையான ஆடை, நகை மற்றும் நறுமணம், உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும். இன்று ஒரு காந்தம் போல் நீங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். உங்களுடைய ரசிகர்கள் உங்களை வரவேற்பார்கள்.

மகரம்: பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு இருக்கும். ஆனால், அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். வருமானத்தை மீறி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் சிறிய பிரச்னைகள் ஏற்பட்டாலும், உங்களது அனுபவம் மற்றும் திறமையின் காரணமாக அவை அனைத்தையும் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்:உங்களது கனவு இல்லம் அல்லது வாகனம் கைக்கூடும் வாய்ப்புள்ளது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், புதிய சொத்துக்கள் வாங்கக்கூடும். அதனால், அது தொடர்பான விவரங்களை சேகரித்து, கடன் விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கவும். கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதற்கு இது சிறந்த நாளாக இருக்கும்.

மீனம்:ஒரு நல்ல நாள் உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் அனைத்து வேலைகளையும், குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாகவே திறமையாக செய்து முடித்து விடுவீர்கள். குடும்பத்துடன் விடுமுறைக்காக வெளியில் செல்ல திட்டமிடுவீர்கள். உங்களது நெடுநாள் ஆசை இன்று நிறைவேறும் வாய்ப்புள்ளது.

ABOUT THE AUTHOR

...view details