தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய தினம் எப்படி இருக்கும்? மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் என்ன! - HOROSCOPE IN TAMIL

தமிழ் மாதம் தை இரண்டாம் தேதியும், ஜனவரி 15ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 6:43 AM IST

மேஷம்:உங்களது தனிப்பட்ட திறன்கள் இன்று உங்களுக்கு சாதகமாக செயல்பட்டு, வெற்றியை கொடுக்கும். உங்களது கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை வெளியிடுவதன் மூலம் பலம் கிடைக்கும். உங்களது நிதி நிலைமை, மேம்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. விபத்துக்கள் அல்லது உடல்நலக் குறைவு ஏற்படக் கூடும் என்பதால், கவனமாக இருக்கவும்.

ரிஷபம்:உங்கள் மனம் இன்று லேசாகவும் நிம்மதியாகவும் உணர்வீர்கள். நீங்கள் உற்சாகம் மிக்கவராக இருக்கலாம் அல்லது பதற்றம் உள்ளவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும், உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். மாலையில் நண்பர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

மிதுனம்: வீட்டில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகள் அதிகரிக்கும். அதை சமாளிக்க முடியாமல் நீங்கள் திணறும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் மனநிலை பாதிக்கப்படலாம். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிக்க வேண்டும்.

கடகம்: உங்களுக்கு இன்று வேலை செய்யும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஏதேனும் ஒன்று செய்ய வேண்டும் என்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்றைய தினத்தில், தோட்டவேலை, சமையல் செய்தல், வீட்டிற்கு விருந்தினரை அழைத்து நேரம் செலவிடுதல் என சிறந்த நாளாக அமையும். இன்றைய தினத்தில், கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், உங்கள் காதல் உறவிற்காக, நேரம், பணம் ஆகியவற்றை செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிம்மம்:விற்பனைத்துறை மற்றும் மார்க்கெட்டிங் துறை தொடர்பான பணியில் இருப்பவர்களாக நீங்கள் இருந்தால், நீங்கள் இன்று மேற்கொள்ளும் சந்திப்புகள் பலன் தரும். எனினும், பயணத்தில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்களிடமுள்ள திறமைகளை அறிந்துகொள்ள இது சரியான நேரமாகும். அடுத்த 2-3 நாட்களில், உங்களது திறமையை நிரூபிப்பீர்கள்.

கன்னி:குடும்ப உறவுகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். அவர்கள் உங்களையும், உங்கள் எண்ணங்களையும் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தகத்துறையை பொருத்தவரை சாதகமான நிலை இருக்கும். மாலையில் நீங்கள் நிம்மதியாக நேரத்தை கழிப்பீர்கள். நீங்கள் கோயிலுக்கு செல்ல பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

துலாம்:உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிப்பீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவருடன், மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை, உங்களது வாழ்க்கைத் துணை புரிந்து கொள்வார். ஒருவருடன் ஒருவர் இணக்கமாக இருந்து, சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்: உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருக்க கூடாது. உங்களது உடல் நல பாதிப்பு காரணமாக, நீங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். உங்களது பழக்க வழக்கத்தை மாற்றி, ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, உடற்பயிற்சி செய்யவும்.

தனுசு: சோதனைக் காலங்கள் எப்போதுமே நீடிப்பதில்லை. உறுதியான மனிதர்கள் எந்த நிலையிலும் நிலைத்து நிற்பார்கள். இதனை மனதில் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்லவும். நேர்மறையான அணுகுமுறையின் மூலம் வாழ்க்கையை எளிமையாக்கவும். தேவைப்பட்டால் மனம் திறந்து பேசுவோம். தேவையில்லாத நெருக்குதலுக்கு அடிபணிய வேண்டாம்.

மகரம்: உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவராக நீங்கள் இருந்துவிட வேண்டாம். உங்களது உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு செயல்பட்டால், பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். சுருக்கமாக கூறுவதென்றால், உங்களது உணர்வுகள் வெற்றிக்கு தடையாக இருக்கும். அமைதியாக பொறுமையுடன் செயல்பட்டு, நேர்மறையான எண்ணம் கொண்டு இருந்தால், பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

கும்பம்: உங்களது உறுதியான நடவடிக்கைகளால் நல்ல காரியங்கள் நடைபெற உள்ளன. சந்தேகங்களும், கவலைகளும் காற்றில் கரைந்து போய், நீங்கள் வெற்றி இலக்கை நோக்கி உறுதியாக செல்வீர்கள். வெற்றிப்பாதையில், பலரின் மனங்களையும் வெற்றி கொள்வீர்கள்.

மீனம்: ஒரு லாபகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வர்த்தகம் மற்றும் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து பணவரவு அதிகம் இருக்கும். உங்களது தொடர்பு திறன் காரணமாக, நல்ல பரிவர்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு, எதிர்பாராத வகையிலான ஆதாயங்கள் கிடைக்கும். உங்களுக்கு உள்ள தொடர்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

ABOUT THE AUTHOR

...view details