தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மிக சிறப்பான முறையில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை 8 நாட்கள் மாசி மகா சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ளது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த கோயிலை குலதெய்வமாக வழிபடுவது ஐதீகம்.