தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

எதிர்பாராத வரவு உள்ள ராசி.. கோபம் அதிகம் வரும் ராசி.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்! - today rasi palan

செப்டம்பர் 14 சனிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்..

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 6:18 AM IST

மேஷம்:நமக்கு நெருக்குதல் இருப்பது சில சமயங்களில், நமது முழு திறமையை வெளிக்கொண்டு வருவதில் உதவியாக இருக்கும். அலுவலகத்தில், சக பணியாளர்களை விட நீங்கள் வேலையில் சிறந்து விளங்குவீர்கள். எனினும் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்காது. எனினும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உடனடியாக பலனை எதிர்பார்க்க கூடாது.

ரிஷபம்: இன்றைய தினத்தில், நீங்கள் பலவிதமான புதிர்களுக்கான பதிவை தேடுவீர்கள். மற்றவர்கள் செய்த தவறுக்காக நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதனால் ஏமாற்றம் மற்றும் வருத்தம் காரணமாக தன்னம்பிக்கை குறையும். உங்களது பலம் என்ன என்பதையும் பலவீனம் என்ன என்பதையும் அறிந்து கொண்டு செயல்படவும்.

மிதுனம்: இன்று, நீங்கள் மற்றவர்களின் திறமையை பாராட்டி ஊக்குவிப்பதில் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பாதுகாப்பு மற்றும் நிதி நிலைமை தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். அன்பினால் இணைக்கப்பட்ட உறவுகள் நீண்ட காலத்திற்கு வலுவானதாக இருக்கும்.

கடகம்: நெருக்கமான நண்பர்கள், உங்கள் மனப்பான்மையை கண்டு பெருமை கொள்வார்கள். அவர்களுடன் நேரத்தை கழித்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். நண்பர்களுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் நீண்ட காலத்திற்கு, நீடித்து இருக்கும்.

சிம்மம்: இன்றைய தினம், சாதக மற்றும் பாதக பலன்களை கொண்டது ஆகும். ஒருபுறம் உங்களது வர்த்தகக் கூட்டாளி அல்லது வாழ்க்கைத் துணை தொடர்பாக உங்களுக்கு அதிருப்தி இருக்கும். மற்றொருபுறம், உங்களது முயற்சிக்கு, எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைத்திருக்கும். நண்பரின் அறிவுரையின் காரணமாக நீங்கள் இரு விஷயங்களையும் ஏற்றுக் கொள்வீர்கள்.

கன்னி: உங்களது மனதில் பல்வேறு அறிவார்ந்த எண்ணங்கள் உதித்துக் கொண்டே இருக்கும். உங்களது அற்புதமான செயல் ஆற்றல் மூலம், அனைத்தையும் சரி செய்து விடுவீர்கள். மற்றவர்கள் மனதைப் படித்து, உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.

துலாம்: இன்று உங்களுக்கு சோகமான நாளாக இருக்கும். எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, இது மன வருத்தத்தை தரக்கூடியதாக இருக்கும். ஆனால் நீங்கள் மன உறுதியுடன் இருப்பதற்கான முக்கிய காரணம், உங்கள் காதல் துணையின் ஆறுதலான வார்த்தைகள் ஆகும்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு, உற்சாகம் அதிகம் காணப்படும். புதிய வர்த்தக முயற்சியை மேற்கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் உங்கள் செயல்திறன் முழுவதையும் பயன்படுத்தி, எல்லாவிதத்திலும் வெற்றி அடைவீர்கள். பொதுவாக இன்றைய நாள், வெகுமதிகள் மற்றும் பாராட்டுக்களுடன், சிறப்பான நாளாக இருக்கும். பணியில் மூத்தவர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்களைப் பற்றிய நல்ல எண்ணத்தை கொண்டிருப்பார்கள்.

தனுசு: இன்று உங்களுக்கு கோபம் உணர்வு அதிகம் இருக்கும். கோபம் உலகையே அழித்துவிடும் என்பதை மறக்க வேண்டாம். இந்த கோபத்தினால் பாதிக்கப்படுவது நீங்கள் தான். அதனால் பொறுமையாக, அவசரப்படாமல் சிந்தித்து செயல்படவும். நிதி நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கவனமாக கையாளவும்.

மகரம்: நீங்கள், இன்று நியாயமான மற்றும் அநியாயமான முறையில் குறிக்கோளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அறிவார்ந்த வளர்ச்சி ஒப்பற்ற தாக இருக்கும். உங்கள் நோக்கமும் சரியாகவே இருக்கும். உங்கள் உறுதிப்பாடு காரணமாக, முடிவுகளை திறமையாக எடுப்பீர்கள்.

கும்பம்: எதிர்பாராத ஒரு நிகழ்வு இன்று ஏற்படலாம். வெற்றி, பணம் மற்றும் காதல் உறவு ஆகிய ஏதேனும் ஒன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு கிடைக்கும். மாலையில் நீங்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடக்கூடும். அல்லது அது தொடர்பான ஆலோசனை அல்லது நடவடிக்கைகளை மேற் கொள்வீர்கள்.

மீனம்: அலுவலகம் மற்றும் வீடு ஆகிய இரண்டிலும், நீங்கள் பொறுப்புகளையும் பணிகளையும் கையாள்வீர்கள். வீட்டை அலங்கரிக்கும் பணியில் முழு மனதுடன் ஈடுபடுவீர்கள். செலவுகள் சிறிது அதிகரிக்கலாம். கடுமையான உங்களது முயற்சிக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்.

ABOUT THE AUTHOR

...view details