தூத்துக்குடி:முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவர் டக்ளஸ் புரூக் என்பவர் தலைமையில் 27 பேர் நேற்று (ஜன.10) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்தனர். இவர்கள் கடந்த 10 நாட்களாக முருகனின் அறுபடை வீடுகளில் தரிசனம் முடித்து விட்டு நேற்று திருச்செந்தூர்க்கு வரிகை புரிந்துள்ளனர். இந்த குழுவில் உள்ள டாக்டர் டக்லஸ் புரூக் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இந்து சைவம் படித்துள்ளார்.
இவர் தற்போது அமெரிக்காவில் 'இந்து சைவம் மற்றும் கலாச்சாரங்கள்' குறித்து வகுப்புகள் நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் அவரது மாணவர்கள் 27 பேரை முருகனின் படைவீடுகளுக்கு அழைத்து சென்று புரணங்களை விளக்கி வருகிறார். இந்த பயணத்தில் அமெரிக்கர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்தபடியும், துளசி மாலைகள் அணிந்தபடியும் முருகனை தரிசனம் செய்து வந்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை புரிந்த அமெரிக்கர்கள் (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க: "பெரியாரைக் கடவுள் மறுப்பாளர் என்ற ஒரு வார்த்தையில் கடந்து போக முடியாது"- சபாநாயகர் அப்பாவு பேச்சு!
கோயிலில் உள்ள உற்சவர் சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், தெட்சிணாமூர்த்தி உள்பட தெய்வங்களை தரிசனம் செய்தனர். இதையடுத்து பேருந்தில் அமர்ந்தபடி திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா என கோஷமெழுப்பும் வீடியோ காட்சி இணைத்தில் வைராகி வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன.11) அவர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் காண செல்கின்றனர்.