நடிகரும். தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். சென்னை டிடிகே சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை த்ரிஷா வாக்களித்தார். ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித். நடிகரும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது வாக்கினைச்ஹ் செலுத்தினார். பாடகியும். நடிகையுமான ஆண்ட்ரியா தனது வாக்கினை செலுத்திய பின் எடுத்த புகைப்படம். விஜய் பாணியில் சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஷால். ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் தனுஷ் வாக்களித்தார். நடிகர்கள் அருண் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் அவர்களது மனைவிகளுடன் வந்து வாக்குகளைச் செலுத்தினர். வாக்கினைச் செலுத்திய பின் மையிட்ட கையை மகிழ்ச்சியுடன் காட்டும் நடிகர் ரஜினிகாந்த். நடிகைகள் வரலட்சுமி மற்றும் ரம்யா பாண்டியன் தனது குடும்பத்துடன் வாக்களித்தனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். நடிகர் விக்ரம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார். தி.நகரில் நடிகர்கள் சிவகுமார். சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்குகளைச் செலுத்தினர். பட்டினப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு நடிகை குஷ்பு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்