Madurai Meenakshi Amman Pattabhishekam: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், நேற்று (வெள்ளிக்கிழமை) விமர்சையாக நடைபெற்றது. பட்டாபிஷேகம் நடைபெற்ற நாள் தொடங்கி ஆடி மாதம் வரை, நான்கு மாதங்கள் மதுரையில் அன்னை மீனாட்சியின் ஆட்சி நடைபெறும் என்பது ஐதீகம்.