தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

7 மணி நேர உக்ரைன் உரையாடலுக்கு 20 மணி நேர ரயில் பயணம்.. மோடி செல்லும் Train Force One-ல் என்ன இருக்கிறது? - What is Train Force One

Modi Kyiv travel by train: போலந்து நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, ரகசியமான ரயில் பயணம் மூலம் உக்ரைனின் கீவ் நகருக்குச் செல்கிறார். இவ்வாறு பிரதமர் மேற்கொள்ள இருக்கும் Train Force One என்ற ரயிலின் பாதுகாப்பு என்ன, கீவ் நகரில் மோடி என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து இச்செய்தியில் காணலாம்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி (Credits - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 10:25 PM IST

ஹைதராபாத்: கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது வரை முடிவுக்கு வராமல் உள்ளது. ஆனால், கடந்த ஜூலை மாதம் இரண்டு நாட்கள் பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்குச் சென்றிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

போர் சூழலை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான சூழலுக்கு திரும்புவதே இந்தியாவின் நோக்கம் என ஐக்கிய நாடு சபைகளில் இந்தியாவின் ஒலி கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யா பயணம் மட்டுமே மேற்கொண்டிருந்த பிரதமர் மோடிக்கு அரசியல் பின்காரணங்கள் கோர்க்கப்பட்டன. இந்த நிலையில் தான், இரண்டு நாட்கள் பயணமாக இன்று போலந்து நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, வெள்ளிக்கிழமை உக்ரைனின் கீவ் நகருக்குச் செல்ல உள்ளார்.

உக்ரைன் உடனான தூதரக உறவுகளை ஏற்படுத்திய பிறகு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் உக்ரைன் தலைநகர் கீவுக்குச் செல்லும் முதல் பிரதமர் மோடி என்றாலும், தனது பயணத்தை இந்தியாவிற்கு வெளியே ரயிலில் மேற்கொள்ள உள்ளார். ரஷ்யா உடனான போருக்குப் பிறகு உக்ரைனில் விமான சேவை முடங்கியுள்ளது. சாலைப் போக்குவரத்தில் பாதுகாப்பில் என்ன நடக்கும் என்பதே தெரியாமல் உள்ளது.

இந்த நிலையில் தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆகியோர் பயன்படுத்திய 10 மணி நேர ரயில் பயணத்தை மோடி பயன்படுத்த இருக்கிறார். போலந்தின் தென்கிழக்கில் இருந்து புறப்படும் இந்த ரயில் கீவ் நகருக்கு 10 மணி நேரத்தில் செல்லும்.

ட்ரெய்ன் ஃபோர்ஸ் ஒன் (Train Force One) என அழைக்கப்படும் 700 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் பயணமானது 20 மணி நேரமாக இருந்தாலும் (போலந்து - கீவ் - போலந்து), கீவ் நகரில் மோடி இருக்கப்போவது என்னவோ 7 மணி நேரம் மட்டுமே. இவ்வாறு போலந்து தலைநகர் வார்சாவில் இருந்து விமானம் மூலம் ரயில் நிலையம் வரும் மோடி, உக்ரைனின் மாநில ரயில்வே கம்பெனியான உக்ரசலிசிண்ட்ஸியா (Ukrzaliznytsia) என்ற ரயில் சேவையில் பயணிக்க உள்ளார்.

போலந்தில் இருந்து கீவ் நகருக்கு செல்லும் ரயிலில் என்னென்ன இருக்கும்? போலந்தின் வார்சாவில் உள்ள செஸ்வோ-ஜாசின்கோ விமான நிலையத்தில் இருந்து ரேஸ்மைசில் குளோனி ரயில் நிலையத்திற்கு வந்து ட்ரெய்ன் ஒன் ஃபோர்ஸில் பயணிக்கிறார் மோடி. உயர்தர பொருட்களால் உருவான இருக்கைகள், கூட்டம் நடத்துவதற்கான அறைகள் மற்றும் வெளிப்புறங்கள் ஆகியவையும் ரயிலில் உள்ளன.

இவ்வளவு வசதிகள் இருந்தாலும், ரயிலின் பாதுகாப்பே முதன்மையானது. எனவே, ரயிலின் புறப்பாடு முதல் கீவ் நகருக்குச் சென்றடையும் வரை உயர்மட்ட பாதுகாப்பு இந்திய - உக்ரைன் அரசால் வழங்கப்படுகிறது. மேலும், ரயில் பயணம் முழுவதும் ராணுவப் படையினர் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பால் முழுக்க முழுக்க கண்காணிக்கப்படும்.

மேலும், “கடந்த பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கீவ் நகருக்கு இந்த ட்ரெய்ன் ஒன் ஃபோர்ஸில் பயணம் மேற்கொண்டபோது ரயிலில் உதவியாளராக இருந்து எவருக்கும் புகைப்படம் எடுக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை. அவர் இந்த ரயிலில் 20 மணி நேரம் பயணம் மேற்கொண்டாலும், கீவ் நகரில் 4 மணி நேரம் மட்டுமே இருந்தார். உக்ரைன் மக்கள் எப்போதும் தைரியசாலிகள். உலகத் தலைவர்களின் பாதுகாப்பே இந்த ரயில் பயணத்தின் முக்கிய குறிக்கோள்” என்கிறார் உக்ரசலிசிண்ட்ஸியா ரயில் சேவையின் முன்னாள் தலைவர் ஒலேக்சண்டர் காம்ஷின் (Oleksandr Kamyshin).

இரும்பு ராஜதந்திரமா இந்த ரயில் பயணம்? 2022-இல் போர் மூண்டதில் இருந்து பைடன் முதல் உலகத் தலைவர்கள் பலரும் ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய ரயில் சேவை மூலமே கீவ் நகருக்குச் சென்று வருகின்றனர். போருக்கு முன்னதாக மில்லியன் கணக்கான மக்கள் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது ரயில் சேவை மட்டுமே உக்ரைனின் முக்கிய போக்குவரத்து சொத்தாக உள்ளது.

அதிலும், 2022, ஏப்ரல் 8 அன்று உக்ரைனின் கிரமடோர்ஸ்க் (Kramatorsk station attack) ரயில் நிலையம் தாக்கப்பட்டதில் 63 பேர் உயிரிழந்து, 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையிலும், உக்ரசலிசிண்ட்ஸியா ரயில் சேவை மட்டும் இன்னும் நின்று கொண்டிருக்கிறது. எனவே தான், மோடியின் இந்த ரயில் பயணத்தின் துவக்க நேரம் முதல் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரைனின் ராணுவத் தளவாடப் பொருட்களை கொண்டு செல்வதற்கு இந்த ரயில் சேவை முக்கிய அங்காற்றுகிறது.

எனவே தான் உலகத் தலைவர்கள் பலரையும் மிகவும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் போலந்து வழியாக கீவ் நகருக்கு கொண்டு செல்லும் பொறுப்பை தனது இரும்புக் கரம் (ரயில் பெட்டிகள்) கொண்ட ராஜதந்திரத்தால் தாங்கி நிற்கிறது உக்ரசலிசிண்ட்ஸியா ரயில் சேவை பிரிவு. இதனிடையே, கீவ் நகருக்கு செல்ல உள்ள பிரதமர் மோடியின் பயணத்தை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன.

இதையும் படிங்க:தொடர் அச்சுறுத்தல்.. முழுகட்ட பாதுகாப்பு.. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் ஒரு பார்வை!

ABOUT THE AUTHOR

...view details