ஐதராபாத்: தெற்கு காசாவின் ராபா பகுதியில் மேற்கொண்டு உள்ள ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் கடந்த மே 24ஆம் தேதி அதிரடி உத்தரவிட்டது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக மே மாத தொடக்கத்தில் இருந்து ராபா பகுதியில் முற்றுகையிட்டுள்ளன.
கடந்த ஆறு மாதங்களாக காசாவின் வடக்கு பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. முன்னதாக 1948ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக குற்றம் சாட்டிய தென் ஆப்பிரிக்கா இதுகுறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது.
தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கின் விளைவுதான் இந்த ராபாவில் இருந்து உடனடியாக இஸ்ரேல் வெளியேற வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டதாக காணப்பட்டாலும், அதை செயல்படுத்த பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இனப் படுகொலை செய்வது என்பது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு நாடு செய்யக்கூடிய மிகக் கடுமையான குற்றமாகும். அனைத்து ஆதாரங்களையும் சாட்சியங்களையும் ஆராய்ந்து இறுதி முடிவுகளை எடுக்க நீதிமன்றத்திற்கு பல ஆண்டுகள் தேவைப்படும். ஆனால், பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை கட்டுப்படுத்த தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சமீபத்திய தற்காலிக நடவடிக்கையில், சர்வதேச நீதிமன்றம் "காசாவில் உள்ள பாலஸ்தீனிய குழுக்கள் மற்றும் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் கொடூர தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், ராபா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப் படுகொலையை நிறுத்தி உடனடியாக வெளியேற வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை இஸ்ரேல் மீறியதாகவும், அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட 8 லட்சம் பாலஸ்தீனியர்களுக்கு பாதுகாப்பு, போதிய உணவு, மருந்து மற்றும் தங்குமிடம் வழங்கியதாகவும் இஸ்ரேல் கூறியதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐநா சபையின் உண்மை கண்டறியும் பணி, விசாரணை கமிஷன் ஆகியவற்றை அனுமதிக்குமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹமாஸ் குழுவால் பிடிக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பணயக் கைதிகள் குறித்து கவலை தெரிவித்த சர்வதேச நீதிமன்றம் அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி ஹமாஸ் பிரிவுக்கு சர்வதேச நீதிமன்றம் வலியுறுத்தியது.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம் தற்காலிக நடவடிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தியது. மீண்டும் மார்ச் 26ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையில் இஸ்ரேலுக்கு நீதிமன்றத்தின் தற்காலிக நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மறுபுறம் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளை இஸ்ரேல் தொடர்ந்து மீறுவதாகவும் அது வெளிப்படையாகம், தெளிவாக ஐநா சபையை அவமதிக்கும் செயல் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் ஏற்கனவே மற்ற சர்வதேச நீதிமன்றத்தை நிராகரித்துவிட்டது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இது போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமான சட்டத்தை மீறுபவர்கள் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்ட அதிகாரம் உள்ளது.
ஐநா பணியாளர்கள் மற்றும் உரிமைகள் அமைப்புகள் வழங்கிய விரிவான ஆதாரங்களை ஆய்வு செய்த பின்னர், பொது மக்களுக்கு எதிரான குற்றங்களை செய்ததற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை குற்றவாளி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்தது. மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant மற்றும் உயர் மட்ட ஹமாஸ் குழு தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அசையும் மனப்பான்மையை கொண்டிருக்கவில்லை என்பது தான் உண்மை.