ஹைதராபாத்: பிரெஞ்சு இந்தியவியலாளரான சில்வைன் லெவியின் கூற்றுப்படி, 'ஞானத்தின் பிறப்பிடமான இந்தியா காலத்தால் அழியாத புகழ்பெற்ற புராணங்கள் மற்றும் தத்துவங்களை உலகிற்கு அளித்துள்ளது. அத்தகைய சிறப்புமிக்க புராணங்களில் ஒன்றுதான் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணம்.
உலக அளவில் அறியப்படும் இதிசாக கதைகளில் ராமாயணமும் ஒன்று. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாரம்பரிய, கலாசாரத்தில் ராமாயணம் இன்றளவும் ஆதிக்கம் செலுத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நாடுகளில் அரங்கேற்றப்படும் நாடகங்கள், நிகழ்த்தப்படும் இசை நிகழ்ச்சிகள், வரைப்படும் ஓவியங்கள், வடிக்கப்படும் சிற்பங்கள், அரச அணிவகுப்புகள் மற்றும் சடங்குகள் என சுமார் 1500 ஆண்டுகளாக இந்துக்களின் கலை மற்றும் கலாச்சார வெளிப்பாடுகளில் ராமாயணம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, பௌத்தம் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பாரம்பரிய கலாச்சாரத்திலும் ராமாயணத்தின் தாக்கம் இருக்கவே செய்கிறது. அநேகமாக உலகளவில் அதிகம் அரங்கேற்றப்பட்டுள்ள நாடக நிகழ்வாகவும் ராமாயணம் உள்ளது.
தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட பல ஆட்சியாளர்கள் பகவான் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராக கருதப்படும் ராமரை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கு அவர்களின ஆட்சிக் காலத்தின் அரச முத்திரைகளே சான்று. அதேசமயம், தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு நகரங்கள் மற்றும் பெருநகரங்கள், வால்மீகி ராமாயணத்தில் இடம்பெறுள்ள இடங்களை தங்களது பெயர்களாக தாங்கி நிற்கின்றன. இவ்வாறு தென்கிழக்கு ஆசியாவின் கலாச்சாரத்தில், நீடித்த ராமாயண பாரம்பரியத்தின் காரணமாக, கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில், சர்வதேச ராமாயண விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது. ராமாயண இதிகாசத்தின் நூற்றுக்கணக்கான பதிப்புகளின் பெருமைகளையும், இந்திய பெருங்கடல் நாடுகளின் கலாச்சாரம் மற்றும் ராஜாங்கத்தில் ராமாயணத்தின் தாக்கம் குறித்தும் உலகிற்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.
ராமாயணத்தின் பர்மிய நடன வடிவம் (Image Credit - Nguyen Thanh Long via Wikimedia Commons) தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து, ;ராமகைன்' என்ற ராமாயணத்தின் சொந்த பதிப்பையும், அதன் அடிப்படையிலான 'கோன்' நடன நாடகத்தையும் கொண்டுள்ளது. 'மகாராடியா லவானா' என்ற ராமாயண பதிப்பையும், அதன் 'சிங்கில்' நாடக வடிவத்தையும் பிலிஃபைன்ஸ் கொண்டுள்ளது. இதேபோன்று ஜாவா தீவுகள் 'கக்காவின் ராமாயண' பதிப்பை பெற்றுள்ளது. மேலும் லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா ராமாயண இதிசாகத்தை தங்களது சொந்த நாடக வடிவங்களை கொண்டுள்ளன. இவை தவிர, சிங்கப்பூர், மலேசியா, வியாட்நாம் உள்ளிட்ட நாடுகளும் ராமாயண பாரம்பரியத்தின் பெருமைகளை கொண்டுள்ளன.
பெளத்த ராமாயணங்கள்:பெரும்பாலும் பெளத்த மதத்தால் வழிநடத்தப்படும் மியான்மர், லோவோஸ், கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகள் பெளத்தத்தின் மறுவிளக்கங்கள், தழுவல்கள் உள்ளிட்டவற்றுடன் ராமாயண பாரம்பரியத்தை ஏற்றுகொண்டுள்ளன. மியான்மரில் ராமாயணம் 'யாமாயணா' அல்லது 'யாம ஜடாவ்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அத்துடன் இதில் 'ராமா', 'யாமா' என்றும் 'சீதா' 'தீதா' என்றும் அழைக்கப்படுகின்றனர்.
தாய்லாந்தின் ராமாகைனை அடிப்படையாக கொண்ட மியான்மர் நாட்டின் ராமாயண பதிப்பில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், 11 ஆம் நூற்றாண்டில் அந்நாட்டை ஆண்ட அனவரத்தா மன்னரின் ஆட்சிக் காலத்தில் ராமாயணம் குறித்து நிகழ்த்தப்பட்ட வாய்மொழி நிகழ்ச்சிகளுடன் ஒத்துப்போவதாக நம்பப்படுகிறது. ராமாயணத்தின் தாய்லாந்து வடிவமான ராமகைன் 18 ஆம் நூற்றாண்டில் அந்நாட்டை ஆண்ட அயுத்யாய சாம்ராஜ்யத்தில் பிரபலமானது. இவை தவிர, 16 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை, புத்த மதம் அல்லாத இந்தோனேசியா மற்றும் மலேசிய நாடுகளின் கலாச்சாரங்களின் தாக்கத்தையும். பர்மாவின் பாரம்பரிய நடன வடிவத்தையும் ராமகைன் கொண்டிருந்தது.
லாவோ நாட்டின் 'பிரா லக் பிரா ராம்' பெளத்தத்தை தழுவிய ராமாயணத்தின் பிரபலமான மற்றொரு மறுபதிப்பாக கருதப்படுகிறது. லாவோவின் தேசிய காவியமாக கருதப்படும் இப்படைப்பின் பெரும்பாலான பகுதிகள் மீகாங் ஆற்றங்கரையில் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு கங்கை நதி எப்படியோ அதுபோல லாவோவக்கு மீகாங் நதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படைப்பின் நாயகனான பிரா ராம், கௌதம புத்தரின் தெய்வீக முன்னோடியாக நம்பப்படுகிறார். இதேபோல், ராமாயணத்தின் லாவோ பதிப்பில் ராவணனின் கதாபாத்திரமாக வரும் ஹாப்மனாசூனே, மாராவின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். மோட்சத்தை அடைவதற்கான புத்தரின் வழிமுறைகளை தடுத்த தீயசக்தி அமைப்பாக மாரா கருதப்படுகிறது.
கம்போடியாவின் ராமாயண பதிப்பான ரீம்கரை சித்தரிக்கும் ஓவியம் (Image Credit - Marcin Konsek via Wikimedia Commons) கம்போடியா நாட்டின் தேசிய காவியமான 'ரீம்கர்', ராமனை 'ப்ரீஹ் ரீம்' என்றும், லஷ்மணனை 'ப்ரீஹ் லீக்' எனவும் குறிப்பிடுகிறது. இதேபோன்று சீதையை 'நேயாங் சீடா' என்றும் அழைக்கிறது. ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தையதாக கருதப்படும் ரீம்கர், இன்று கம்போடியாவின் கெமர் சமூக மக்கள் தங்களது பாரம்பரிய நடனத்தை வெளிப்படுத்துவதற்கான சிறந்த படைப்பாக திகழ்கிறது.
தாய்லாந்து நாட்டின் காவியமான ராமகைன், 700 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானதாக கருதப்படுகிறது. ஆனால், இந்த காவியத்தின் பெரும்பாலான பகுதிகள், கி.பி. 1766 - 1767 இடைப்பட்ட காலத்தில் பர்மிய கொன்பாங் வம்ச மன்னரான அயுதயாவின் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டன அல்லது இழக்கப்பட்டன. சியாமின் சக்ரி வம்ச மன்னரான முதலாவது ராமா ஆட்சிக்காலத்தில இருந்து தற்போது வரை படிக்கப்படும் ராமகைன் பதிப்பு, தாய்லாந்தில் இன்று கல்வியியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.
லாவோ நாட்டின் 'பிரா லக் பிரா ராம்' ராமாயண பதிப்பை விவரிக்கும் நாடகம் (Image Credit - Jakub Hałun via Wikimedia Commons) முஸ்லிம் நாடுகளில் ராமாயணம்:உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இந்தியாவின் இதிகாசமான ராமாயணம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கக்கூடிய தகவலாக இருக்கலாம். ஆனால், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு முஸ்லிம் நாட்டில் ராமாயணம் இன்றளவும் ஆளுமை செலுத்துவது கலாச்சார மாற்றம் அல்லது அதன் நெகிழ்வுத்தன்மைக்கு சிறந்த சான்றாகும். இங்குள்ள யோக்யகர்தா நகரம், இந்தியாவில் ராமர் பிறந்த ஊராகவும், ராமராஜ்ஜியம் நடைபெற்ற இடமாகவும் கருதப்படும் அயோத்தியின் மறுபெயராக, ஜாவானீஸ் மொழிபேசும் இந்தோனேசிய மக்களால் நம்பப்படுகிறது.
'சேந்திரதாரி ராமாயணம்' உள்ளிட்ட ராமாயணத்தின் தழுவல்கள் இந்தோனேசியாவில் பொதுவாக 'வயாங் குலிட்' எனப்படும் பொம்மலாட்டத்தின் மூலம் அரங்கேற்றப்படுகிறது. இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் பல இரவுகள் நடத்தப்படுகின்றன. அத்துடன், பாலே எனப்படும் நாட்டிய நாடகம் வாயிலாகவும் ராமாயண கதை பொதுமக்களுக்கு சொல்லப்படுகிறது. இந்தோனேசியாவில் உள்ள புகழ்பெற்ற பிரம்பனன் இந்து கோயிலின் யோக்யகர்த்தா புரவிசாதா கலாச்சார மையத்திலும், ஹயாத் ரீஜென்சி யோககர்த்தா ஹோட்டலிலும் இந்நாட்டிய நாடகம் அரங்கேற்றப்படுகிறது. ஜாவானியர்களின் காக்கும் கடவுள் மற்றும் அவரது மூன்று அழிக்கப்பட்ட மகன்களான கரேங், பெட்ரூக், பாகோங் வால்மீகி ராமாயணத்தின் முக்கிய ஜாவானிய இடைச்செருகல்களில் ஒன்றாக கருதப்படுகின்றனர்.
மலேசியாவின் ராமாயண காவியமான 'ஹிகாயத் செரி ராமா', இஸ்லாமியமாக்கலுக்கு முன்னும் பின்னும் தமிழ் வணிகர்களுடனான இந்நாட்டினுடைய தொடர்பின் விளைவாக உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. மலாய் இலக்கிய பராம்பரியத்தின் ஓர் வடிவமான வயாங் குலிட், மகாராஜா வானாவை (ராவணன்) ஒப்பீட்டளவில் மிகவும் மரியாதைக்குரியவராகவும். நீதிமானாகவும் சித்தரிக்கிறது. அதேசமயம், செரி ராமாவை ( ராமர்) ஒப்பீட்டளவில் தான் என்ற அகந்தை கொண்டவராகவும், சுயநீதி கொண்டவராகவும் சித்தரிக்கிறது. இதேபோன்று ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் ராமாயண தழுவல், 'மஹாராடியா லவானா' என்று அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க:தலாய் லாமா அமெரிக்க பிரதிநிதிகள் குழு சந்திப்பின் மூலம் சீனாவுக்கு இந்தியா சொல்லும் செய்தி என்ன?