ஐதராபாத் : டீப் பேக் தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட மெஷின் லேர்னிங் மற்றும் பேஷியல் ரெகக்னிஷன் அல்காரிதம்களை மேம்படுத்துகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ரெடிட் பயனர் ஒருவரால் அறிமுகமான இந்த தொழில்நுட்பம் பல்வேறு காலக்கட்டங்களுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்து உள்ளது.
இந்த கண்டுபிடிப்பு உலகளவில் தகவல் ஒருமைப்பாடு, தனிநபர் தனியுரிமை மற்றும் ஜனநாயக செயல்முறைகளுக்கு சவாலாக உள்ளது மட்டுமின்றி போலி வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை உருவாக்கவும் உதவுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
தவறாக பயன்படுத்தப்படும் டீப் பேக் தொழில்நுட்பத்தால் ஜனநாயகத்தில் ஏற்படும் தாக்கங்கள் :
டீப் பேக் தொழில்நுட்பம் டீப் பேசஸ் மற்றும் டீப் வாய்சஸ் ஆகிய இரண்டு வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் டீப் பேசஸ் என்பது குறிப்பிட்ட வீடியோவில் ஒருவரது முகத்தை செயற்கையாக உட்புகுத்துவதாகும். அதேபோல் டீப் வாய்சஸ் என்பது குறிப்பிட்ட ஆடியோவை குறிப்பிடத்தக்க நபர் பேசியது போன்று மிமிக்கிறி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
இந்த மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மீடியா சார்ந்த புதுப் புது உள்ளடக்கங்கள், உள்ளிட்டவைகளை உருவாக்க உதவுகிறது. டெய்லர் ஸ்விப்ட், செலினா கோம்ஸ், எலான் மஸ்க் மற்றும் ஜோ ரோகன் போன்ற பிரபலங்களை உள்ளடக்கிய தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை அவர்களின் நேரடி பங்கேற்பு இல்லாமலேயே இந்த தொழில்நுட்பம் குறிப்பாக மார்க்கெட்டிங் டொமைனில் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறை பல ஆண்டுகளாக இது போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7 பாகத்தில் பிரையன் மற்றும் ரோக் ஒன் படத்தில் லியா போன்ற இறந்த நடிகர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதற்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவுகின்றன.
இருப்பினும், டீப் பேக் தொழில்நுட்பம் ஏற்கனவே உள்ள முகங்களை அச்சு அசலாக நகல் எடுக்க பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், முற்றிலும் கற்பனையான கதாபாத்திரங்களை உருவாக்கும் திறனையும் கொண்டு உள்ளது. மேலும் உண்மைச் சம்பவங்களுக்கு மாறாக கற்பனைகளை கொண்டு போலி பிரசாரங்களும் இந்த டீப் பேக் தொழில்நுட்பத்தில் பயன்படுத்த கூடும் என்றால் அது மிகையாகாது.
ரஷ்யாவிற்கு ஆதரவான சமூக ஊடக கணக்குகளில் உக்ரைன் வீரர்கள் குறித்த வீடியோக்கள் பரவியது முதல், ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப், கஜோல் மற்றும் ஆலியா பட் போன்ற இந்திய நடிகைகளின் வைரலான டீப் பேக் வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு மோசமான சூழலை உருவாக்கக் கூடும் என்பது உணர்த்துகிறது.
அதேபோல் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் போரை கைவிட்டு சரணடைவது தொடர்பான டீப் பேக் வீடியோ வெளியாகி மோசமான சூழலை உருவாக்க துணை போனது என்றால் நிதர்சனமான உண்மை. டீப் பேக் தொழில்நுட்பம் படைப்பாற்றல் மற்றும் சந்தைப்படுத்துதலில் இணையற்ற வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில் குறிப்பிடத்தக்க நெறிமுறை சவால்களையும் முன்வைக்கிறது.
மார்க்கெட்டிங் துறையில் டீப் பேக் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு என்பது அளப்பறியதாக இருந்தாலும் சில நேரங்களில் சமுதாய சிக்கல்களை தூண்டும் வகையில் அமையக் கூடிய நிலையில் உள்ளது. அதனை சீரமைக்கு சூழ்நிலைக்கு ஏற்ப வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குதன் மூலம் உள்ளடக்க நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை முறையாக கையாள முடியும்.
செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்குப் பதிலாக மேம்படுத்த உதவுகின்றன. Mondelez, ITC மற்றும் Zomato போன்ற நுகர்வோர் பிராண்டுகளின் டீப் பேக் தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாடு விளம்பர உத்திகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
பார்வையாளர்கள் ஷாருக் கான், ஹிருத்திக் ரோஷன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்ற முக்கிய பிரபலங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த தொழில்நுட்பம் அளப்பறிய பணிகளில் ஈடுபடுகிறது. அதேநேரம் இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் அதன் மூலம் விரும்பத்தகாத விளம்பரங்களை பிரபலங்கள் ஊக்குவிக்கும் நிலையை உருவாக்குகின்றன.
டீப் பேக் தொழில்நுட்பம் குறித்து குறிப்பிடத்தக்க வகையில் கூறுகையில் அண்மையில் ஐடிசி நிறுவனத்தின் சன்பீஸ்ட் டார்க் பேன்டஸி பிஸ்கட் விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டை அது தொடர்பான தொழில்நுட்பத்தை தனது இணையதளத்தில் வெளியிட்ட நிறுவனம், யாரும் தங்களது புகைப்படத்தை அதில் பதிவிட்டு விளம்பரத்தில் ஷாருக்கானுடன் தோன்றுவது போல் மாற்றக் கூடிய வகையில் விளம்பரப்படுத்தியது. இந்த விளம்பரம் வைரலானது.
அதேபோல் சோமேட்டோ நிறுவனமும் இதே பாணியை கடைபிடித்து ஹிருத்திக் ரோஷனை கொண்டு டீப் பேக் தொழில்நுட்பத்தில் விளம்பரம் வெளியிட்டது.