ETV Bharat / state

மதுரையில் மெட்ரோ ரயில்... ஒத்தக்கடை தொடங்கி திருமங்கலம் வரை.. 32 கி.மீ.க்கு திட்டம்.. விறுவிறுக்கும் ஆய்வு பணிகள்! - MADURAI METRO RAIL PROJECT

மதுரை ரயில்வே தண்டவாளம் அடியில் மெட்ரோ சுரங்கம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

திட்ட இயக்குனர் அர்ஜுனன், மதுரை சந்திப்பு
திட்ட இயக்குனர் அர்ஜுனன், மதுரை சந்திப்பு (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு, மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது என்று மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

மதுரை மெட்ரோ ரயில் அமைக்க ரூ.11,368.35 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தலைமையில், மதுரை ரயில்வே தண்டவாளம் அடியில் மெட்ரோ சுரங்கம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்தும், ராமேஸ்வரம் ரயில் லைன் மற்றும் விருதுநகர் ரயில் லைன் ஆண்டாள்புரம் பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.

32 கி.மீ.க்கு திட்டம்

இதனைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ''மதுரை மெட்ரோ ரயில் ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் தொடங்கி, புதூர் வழியாகச் செல்லும். தமிழ்நாடு ஹோட்டல் அருகே மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதை தொடங்குகிறது. அங்கிருந்து வைகை ஆறு, மீனாட்சி அம்மன் கோவில் கடந்து, ஆண்டாள்புரத்தில் முடிவடைந்து பின்னர் அங்கிருந்து மேலெழும்பி திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் வரையில் 32 கி.மீ.க்கு திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆண்டாள்புரத்திலிருந்து, திருப்பரங்குன்றம் வழியாக இந்தப் பாதையில் செல்கிறது. இதில் தொழில்நுட்ப ஆய்வுக்காக தற்போது வந்திருக்கிறேன். இந்த மெட்ரோ ரயில் திட்டப் பணி. ரூ.11,340 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசிடமிருந்து விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சென்று இருக்கிறது. இதனை பரிசீலனையில் வைத்துள்ளனர்.

தற்போது நடத்தப்படும் ஆய்வு மெட்ரோ அமைப்பதற்கான கால தாமதம் இல்லாமல் இருக்க ஏதுவாக இருக்கும். கோயம்புத்தூருக்கும் சேர்த்து மொத்தமாக தான் திட்ட அறிக்கைகள் மத்திய அரசிடம் அனுப்பப்பட்டுள்ளன.

மதுரையில் 6 கிலோமீட்டர் தூரம் மெட்ரோ சுரங்கப்பாதையை அமைக்க சிறிது கடினமாக இருக்கலாம். ஏனென்றால், பாறைகள் மிகுந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மெட்ரோ பணிக்கு நிலம் கையகப்படுத்த எந்தவித தொய்வும் ஏற்படாது. மொத்தமாக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அவற்றின் எண்ணிக்கை மாறுபடலாம்'' என அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.