ஹைதராபாத்: இலங்கை, நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் அண்மையில் நேரிட்ட அரசியல் மாற்றங்கள் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். வங்கதேசத்தில் 15 ஆண்டுகால ஷேக் ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. இலங்கையில் புதிய அதிபராக திசநாயகே தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தில் கே.பி.சர்மா ஒலி ஆட்சியை கைப்பற்றி உள்ளார்.
மாற்றம் நேரிடும் தருணத்தில் அதனை அனுமதிப்பது தவிர வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று வங்கதேசத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் குறித்து கூறுகிறார் இந்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர். இந்தியாவுடன் தோழமை காட்டிய ஒரு அரசு வன்முறையின் வழியில் அப்புறப்படுத்தப்பட்டதில் எந்தவித அதிருப்தியையும் வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் டெல்லியின் ஆட்சி மட்டத்தில் இந்தியாவிடம் இருந்து வங்கதேசம் விலகிச் செல்லாது என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்தியா இல்லாமல் வங்கதேசத்தால் என்ன செய்து விடமுடியும்? அந்த நாட்டின் தனிநபர் ஜிடிபி-ஐ உயர்த்த இந்தியாவில் இருந்து முக்கியமான பொருட்களை இறக்குமதி செய்யாமல் சாத்தியம் இல்லை.
இந்த கருத்தாக்கம் வங்கதேசத்தால் மட்டும் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை. தவிர இலங்கை, நேபாளம் ஆகிய நாட்டின் அரசுகள் இந்தியாவின் அதானியை தங்களது பொருளாதாரத்தில் ஈடுபடுத்துவதில் சவாலாக இருந்தன. இத்தகைய இந்தியாவின் அதீத நம்பிக்கையில், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் தாக்கத்தில் தவறான புரிதலில் நேரிட்ட பின்னடைவாகவே ஹஷீனா அரசின் வீழ்ச்சி என்பது கருதப்படுகிறது. நேபாளத்தைப் பொறுத்தவரை அதன் வீழ்ச்சி மற்றும் எழுச்சியில் இந்தியாவின் தாக்கம் என்பது 2015ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமற்ற வகையில் நேபாளத்தின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை வரை இருந்தது.
ஆனால் அதன் பின்னர் அதே நிலை தொடரவில்லை. இன்னொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த வரிசையில் இந்தியா இருப்பதாக நேபாளத்தின் சாதாரணநபருக்கு கூடத் தெரிந்திருக்கிறது. இந்தியாவை போல நேபாளத்தின் மீது சீனா கடுமை காட்டுவதில்லை என்று நேபாளத்தினர் கருதுகின்றனர். நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் தங்களது வலிமையை இழந்து விட்டனர். அவர்கள் ஆட்சிக்கு வருவது என்பது ஒன்று சீனாவின் ஆதரவு அல்லது இந்தியாவின் ஆதரவுடன் மட்டும்தான் நிகழ்கிறது. அதே நேரத்தில் சீனாவின் கம்யூனிஸ்ட் அரசுடன் நெருக்கமாக இருப்பதுதான் நல்லது என்றும் புரிந்திருக்கின்றனர். நேபாளத்தில் அதானி குழுமம் லும்பினி, போகாரா பகுதியில் உள்ள சீனா கட்டமைத்த விமான நிலையங்களை கையகப்படுத்தியது. இதற்கு இந்திய அரசு ஆதரவு இருப்பதாக நினைத்து இந்தியாவின் மீது நேபாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.