ஐதராபாத்: கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏறக்குறைய 25 கோடி மக்கள் பல பரிமாண வறுமை குறியீடில் இருந்து வெளியேறி உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் நிதி ஆயோக் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுரையை நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் மற்றும் மூத்த ஆலோசகர் யோகேஷ் சூரி ஆகியோர் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு கொள்கை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி (OPHDI) ஆகியவற்றின் தொழில்நுட்ப உள்ளீட்டு கருத்துகளுடன் எழுதியுள்ளனர்.
இந்த கட்டுரையில் இருந்த தரவுகளின் அடிப்படையில், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார அடிப்பாடையில் அமைப்பின் வெளிப்படையான கருத்துகள் மூலம் சாத்தியமற்றதை கூட தனது அரசாங்கம் சாத்தியமாக்கி உள்ளதாக தெரிவித்தார்.
நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையின் படி இதுவரை அரசாங்கத் திட்டங்களின் பலன்களை அனுபவரிக்க தவறியவர்களை பிரதிநிதித்துவம் செய்வதால் அறிக்கையை வெறும் புள்ளி விவரங்களாக காண முடியாது என்று கூறினார். இருப்பினும், நிதி ஆயோக்கின் அறிக்கையை சாடிய காங்கிரஸ் கட்சி, நலிவடைந்த மக்களை நலத் திட்டங்கள் மற்றும் இலவச ரேஷன் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் இருந்து விலக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் சதி என்று குற்றம் சாட்டியது.
அதேநேரம், உலகிலேயே நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது என்ற மத்திய அரசின் தொடர்ச்சியான முழக்கங்களின் பின்னணியில், சில பொருத்தமான கேள்விகளை முன்வைக்கின்றன, இந்தியா 2047ஆம் ஆண்டிற்குள் வறுமை மற்றும் பசியில்லாத விக்சித் பாரதத்தின் பாதையில் நகர்கிறதா? நிபுணர்களால் எழுப்பப்பட்ட கோட்பாட்டு முறை மற்றும் அனுபவ ரீதியான கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டு உள்ளதா? 2005-20006 இந்தியாவில் நிதி ஆயோக்கின் ஆய்வறிக்கை, 2030 க்கு முன்னதாகவே பல பரிமாண வறுமை குறியீடு பாதியாக குறையும் மற்றும் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதற்கான பாதையில் சரியாக உள்ளதாக என்ற கேள்விகளை எழுப்புகின்றன.
மேலும், போஷன் அபியான், அனீமியா முக்த் பாரத் மற்றும் உஜ்வாலா யோஜனா போன்ற அரசின் திட்டங்கள் பல்வேறு வகையான பற்றாக்குறையைத் குறைப்பதில் முக்கியப் பங்காற்றி உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளன. நிதி ஆயோக்கின் அறிக்கையின் படி, இந்தியாவில் 2013-14 நிதி ஆண்டில் பல பரிமாண வறுமை குறியீடு 29.17 சதவீதம் என்ற நிலை இருந்த நிலையில், 2022-23 நிதி ஆண்டில் 11.28 சதவீதமாக சரிவை சந்தித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
BIMARU என்று அழைக்கப்படும் சமூக மற்றும் பொருளாதார குறியீடுகளில் பின்தங்கி இருந்த பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல பரிமாண வறுமை குறியீடு கணிசமாக குறைந்து உள்ளதாக நிதி ஆயோக்கின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் 5.94 கோடி மக்கள் பல பரிமாண வறுமை குறியீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பீகாரில் 3.77 கோடி பேரும், மத்திய பிரதேசத்தில் 2.30 கோடி மக்களும், ராஜஸ்தானில் 1.87 கோடி பேரும் வறுமை குறியீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களை மதிப்பீடுவதில் என்ன தவறு நடக்கிறது? :
நிதி ஆயோக்கின் அறிக்கையின் படி, தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் ஒரே நேரத்தில் ஏற்படும் இழப்புகளை அளவிடுகிறது. அது அனைத்தும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வருவது சாத்தியமா என்பது தான் நிபுணர்களின் கேள்வியாக உள்ளது.
பல பரிமாண வறுமை குறியீடு ஏற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கை அல்ல: