-By Sanjay Pulipaka
ஹைதராபாத்:உலகின் உயர்ந்த அந்தஸ்து மிக்க அதிகாரத்துடன் வளர்ந்து வரும் பொருளாதார நாடு எவ்வாறு ஈடுபாடு கொள்வது? என்பதாக சர்வதேச அரசியலில் பங்கு வகித்தல் மற்றும் அதன் அடையாளம் ஆகியவற்றில் தீவிரமான உள்நாட்டு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா-அமெரிக்கா நாடுகளின் தலைவர்களுக்கு இடையே அண்மையில் நடந்த உச்சி மாநாடு சந்திப்பு குறித்து நெருக்கமாக ஆராய்ந்தால் இந்த கேள்விக்கு விடைகிடைக்கும்.
தொடர்ச்சியான சந்திப்புகள்:பிரதமர் நரேந்திர மோடியின் அண்மை கால அமெரிக்க பயணம், தயார்படுத்துதலுக்கு முந்தைய முயற்சியாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற விழாவில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். டிரம்ப்பின் புதிய குழுவில் இடம் பெற்றிருக்கும் பலரை அவர் சந்தித்து உரையாடினார். அமெரிக்காவுக்கு பயணம் சென்ற போது அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்கும் முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய உளவுப்பிரிவு இயக்குநர் துளசி கப்பார்ட், எலான் மஸ்க், விவேக் ராமசாமி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் என மூத்த அமெரிக்க அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குழுவினரின் கொள்கை கட்டமைப்புகளை இந்திய பிரதமர் புரிந்து கொள்வதற்காக வாய்ப்பை அவர்கள் வழங்கினர்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடந்த 13ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடி-அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர் (AP) முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர், இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற நிலையில் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் நிகழ்ந்திருக்கிறது. அதிபர் டிரம்ப், அவரது குழுவினர் முன்பே வரையறுக்கப்பட்ட கொள்கை மற்றும் ஒரு தெளிவான பாதையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றனர். பல்வேறு கொள்கை முயற்சிகளை வேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.
அமெரிக்காவின் மையக்கருத்து:கடந்த சில வாரங்களாக டொனால்டு டிரம்ப், உள்நாட்டு, வெளிநாடு கொள்கைகளில் சீரான மறுவடிவமைப்பை மேற்கொண்டு வருகிறார். உலகமயமாக்கலை கேள்விக்கு உள்ளாக்காமல் மேற்கொள்வது, அமெரிக்காவின் உற்பத்தி துறையில் சரிவுக்கு உள்ளாக்குவதாக வாதிடுகிறார். மக்களின் எளிமையான நகர்வு என்பது அமெரிக்க அடையாளத்தை மாறுதலுக்கு உள்ளாக்குகிறது. ஆகையால், இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதித்தல், குடியேற்ற விதிகளை கடுமையாக்குதல் ஆகியவை அமெரிக்கா பொருளாதாரம் மற்றும் அதன் அடையாளத்தை ஆய்வு செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிபர் டொனால்டு டிரம்ப் (AP) இறக்குமதி வரிகள் மற்றும் குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்குதல் நடைமுறைகள் அமெரிக்க அரசியலின் மையக் கருத்தாக இருக்கிறது. இறக்குமதி வரிகளில் இந்தியாவுக்கு எதிராக கடுஞ்சொற்களால் உத்தரவிடப்பட்டும் கூட அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு பதிலடியும் தரவில்லை. அனைத்துக்கும் அப்பால், இந்தியாவுக்கு மட்டுமின்றி அல்லது இதர வெளிநாடுகளும் ஏற்றாலும் அல்லது ஏற்காவிட்டாலும் இந்த விவாதங்கள் அமெரிக்க அரசியலை வடிவமைக்கின்றன.
துர்கேஸ் ராய் ஊகித்தலின்படி, 10 முன்னணி வர்த்தக கூட்டாமைகளுக்கு மத்தியில் இந்தியா சாதகமான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தை அமெரிக்காவுடன் மட்டும் மேற்கொள்கிறது. எனவே பரஸ்பர வளர்ச்சியில் அமெரிக்கா உடனான வர்த்தக உறவு என்பது டெல்லிக்கு முக்கியமானதாகும். அமெரிக்க அதிபர் உடனான இந்திய பிரதமர் சந்திப்பின் போது வரி விதிப்புகள் மீதான இந்தியா-அமெரிக்கா இடையே அதிருப்தி நிலவக்கூடும் என்ற அச்சம் இருந்தது. இந்திய பிரதமரை சந்திக்கும் முன்பு, உயர்ந்த வரிவிதிப்புகள் காரணமாக இந்திய சந்தையை அமெரிக்க நிறுவனங்கள் அணுகுவதில் சிக்கல்கள் உள்ளதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். எனினும் இந்தியா மீது உடனடியாக எந்த ஒரு கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், பதிலுக்கு பதிலாக இந்தியாவின் பொருட்களுக்கு வரி விதிப்பது என்ற சாத்தியம் குறித்து ஆய்வு செய்யுமாறு அமெரிக்க அரசின் மத்திய அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இருமடங்காக அதிகரிக்க முடிவு:எனவே, பிரதமருடன் வருகை தந்த இந்திய குழுவினர், அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புகள் மற்றும் கொள்கை நடவடிக்கைகள் குறித்து உடனடியாக பதில் அளிப்பதில் மிகவும் கவனமாக இருந்தனர். எனினும், வர்த்தகத்தில் பரஸ்பரம் கருத்து வேறுபாடுகள் குறித்து விரிவாக இருதரப்பு குழுவினரும் விவாதித்ததாக கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது. பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய முதல் கட்டமாக பன்முகத்துறை இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் 2025 குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திட்டமட்டிருப்பதாக இரு நாடுகளும் அறிவித்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை இருமடங்காக 500 பில்லியன் டாலராக அதிகரிப்பது என்ற இலக்கு குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த புள்ளிவிவரங்கள் (AP) 500 பில்லியன் டாலர் இலக்கு என்பது பார்ப்பதற்கு சவாலானதாகத் தோன்றலாம். ஆனால், இந்த இலக்கை அடைய முடியும். வர்த்தகத்தை அதிகரிக்கும் முயற்சியில் கச்சா எண்ணைய், பெட்ரோலிய பொருட்கள், திரவ வடிவிலான இயற்கை எரிவாயு ஆகியவற்றை வழங்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் அணு மின் சக்தியை அதிகரிக்க சிறிய மாதிரி அணு உலைகளை இந்தியாவுக்கு தருவது என இருநாடுகளும் ஒப்புக் கொண்டன. முதலீடுகளை அதிகரித்தல், புதுமையான கொள்கைகள் வாயிலாக பரஸ்பரம் வரி வித்தியாசங்களுக்கு தீர்வு காண முயற்சி செய்வதற்கான ஆலோசனையை இந்த அறிவிப்புகள் அளித்துள்ளன.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்ப அழைத்துக் கொள்வதற்கு இந்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. சில சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும், சட்டவிரோத குடியேறிகள் திருப்பி அனுப்பப்பட்ட போது அவர்களுக்கு கைவிலங்கிடப்பட்டது, காலில் சங்கிலியிடப்பட்டது குறித்த படங்கள் இந்தியாவில் விவாதப்பொருளாக மாறின. சட்டவிரோத குடியேறிகள் திரும்ப அனுப்பப்பட்ட விதம் குறித்து இந்திய அரசு எந்த ஒரு விமர்சனத்தையும் முன் வைக்கவில்லை. சரிபார்த்தலுக்குப் பின்னர் சட்டவிரோத குடியேறிகளை திரும்ப பெற்றக்கொள்ள தயாராக இருப்பதாக இந்தியா கூறியது. மாணவர்கள், பணியாற்றுவோர் சட்டமுறைப்படி அழைத்து கொள்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாக மத்திய அரசு கூறியது.
பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல்:மோடி-டிரம்ப் உச்சி மாநாடு சந்திப்பில் தொழில்நுட்பம், புதுமைப்படத்தல் ஆகியவற்றில் முயற்சிகளை தொடங்குவது என்பது தான் முக்கியமான கருத்தாக இருக்கிறது. இருநாடுகளுக்கு இடையே செமிகண்டக்டர்கள், குவான்டம் தொழில்நுட்பங்கள், எரிசக்தி, விண்வெளி மற்றும் அதுகுறித்த துறைகள் உள்ளிட்ட உத்தியோகப்பூர்வ தொழில்நுட்பங்களை இணைந்து முன்னெடுக்க அமெரிக்கா-இந்தியா டிரஸ்ட்(முக்கியத்துவாய்ந்த தொழில்நுட்பத்தை உபயோகிக்க மாற்றத்துக்கான நல்லுறவு) முயற்சி என்பது தொடங்கப்பட்டுள்ளது. பிற பகுதிகளிலும் தொடர்புடைய முழுமையான சிக்கலான ரசாயன பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மீளுருவாக்கத்துடன் கூடிய விநியோக கட்டமைப்பை கட்டமைத்தலில் ஒத்துழைப்பை மேற்கொள்வதாகும்.
பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பில் மேலும் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்புத்துறை தொழில் ஒத்துழைப்பை அதிகரிப்பதை கூட்டறிக்கை வலியுறுத்துகிறது. பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் காலாட்படை போர் வாகனங்கள் ஆகியவற்றில் இணைந்து உற்பத்தி செய்வதை முன்னெடுப்பது என்று இருதரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆறு, பி81 ரக கடல் கண்காணிப்பு விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது. மேலும் இந்தியாவுக்கு எஃப்-35 ரக அதிநவீன ஜெட் விமானங்களை விற்க தயாராக இருப்பதாக டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு-தொழிலக ஒத்துழைப்புக்கான தொழில் கூட்டணிக்கான தன்னாட்சி அமைப்பை இரு நாடுகளும் தொடங்கி உள்ளன. 2008ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உபகரணங்களை அவ்வளவாக ஏற்றுமதி செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் துணை பொருட்களுக்கான ஒப்பந்தங்கள் 20 பில்லியன் டாலருக்கும் மேலாக அதிகரித்தது. முக்கியமாக, இருநாடுகளிலும் வலுவான ஒத்துழைப்பு காரணமாக பாதுகாப்புத்துறை ஏற்றுமதியில் இந்தியாவை முக்கியமான நாடாக அமெரிக்கா கருதியது. எதிர்காலத்தில் பாதுகாப்பு விநியோக கட்டமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் இருப்பதை இந்த முன்னெடுப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியாவின் கவனமான முயற்சி:உக்ரைன் போர், இஸ்ரேல்-பாலஸ்தீன சிக்கல் போன்றவற்றுக்கு தீர்வு காண்பது, பெரிய உத்திகளைப் பொறுத்தவரை, டிரம்ப் நிர்வாகம் கூட்டணி நாடுகளுடன் உறவுகளை நிர்வகிப்பதில் போதுமான கவனம் கொள்ளாமல் இருந்தது என்ற சூழல் நிலவியது. எனினும், டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற சில மணி நேரங்களுக்கு உள்ளேயே குவாத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கொண்ட கூட்டத்தை வாஷிங்டன்னில் அமெரிக்கா ஒருங்கிணைத்தது.
அதிபராகப் பதவி ஏற்ற முதல் மூன்று வாரங்களுக்குள், இதர நாடுகளைச் சேர்ந்த நான்கு தலைவர்களை டிரம்ப் சந்தித்தார். அவர்களில் இந்தியா, ஜப்பான் நாடுகளின் பிரதமர்களும் அடக்கம். இயற்கை பேரிடலில் இருந்து மக்களை உடனடியாக மீட்டெடுக்க விமானம் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான திறனை பகிர்ந்து கொள்வதற்கான முயற்சிகள், கடல் பகுதி கண்காணிப்பில் இணைந்து செயல்படும் தன்மையை மேம்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண ஒத்துழைப்புக்கான முக்கியமான விரைவான முன்னெடுப்பை குவாத் நாடுகளின் தலைவர்கள் விரைவில் செயல்படுத்துவர் என இந்தியா-அமெரிக்கா கூட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
டிரம்ப்-மோடி சந்திப்பின் ஆரம்ப கட்ட ஈர்ப்பு என்பது இருநாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் பன்முக துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் ஒருங்கிணைக்கப்பதாக இருக்கும். அமெரிக்க அரசியல் மாறுதலுக்கு உள்ளான நிலையில், குடியேற்றம் மற்றும் வரி விதிப்பு குறித்து குரல் கொடுப்பதில் ஈடுபடாமல், இந்தியா தனது நலன்களை கவனமாக மேம்படுத்த முயற்சிக்கும். இந்தியாவின் பாதுகாப்பில் அதன் அண்டை நாட்டுடனான கவலை குறித்த அம்சத்தை அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்பது குறித்து இந்தியாவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாட்டுக்குள் நேரிட்ட அதிகார மாற்றங்கள், நாடுகளுக்கு இடையேயான அதிகார மாற்றங்கள் சர்வதேச அரசியலை மோசமாக்கி உள்ளன. இது போன்ற நிலையற்ற தன்மையை நிர்வகிக்க, இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயாக நாடுகள் அதிக அளவு தீவிரத்துடன் மேலும் ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும்.
(கட்டுரையாளர் சஞ்சய் புலிபாகா பொலிடியா ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அவரது சொந்தக் கருத்துகளாகும்)