ஐதராபாத்: அமெரிக்க அதிபர் பைடனின் அண்மைக்கால நடவடிக்கைகளை உற்று பார்க்கையில், மேற்கு ஆசியா மீதான அந்நாட்டின் பார்வை என்பது முற்றிலும் மாறுபட்டு இருப்பதை உணர முடிகிறது. அதிபர் பைடனின் சிறப்பு கவுன்சலில் மகேர் பிடார் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்க வகையில் உற்று நோக்க வேண்டிய விஷயமாகும்.
முன்னதாக ஒபாமா நிர்வாகத்தின் கீழ் இஸ்ரேல் - பாலஸ்தீன் விவகாராத்தை மகேர் பிடார் கையாண்டு வந்தார். மாணவராக இருந்த போது அவர் பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் அமைப்பின் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு வன்முறைகளுக்கு எதிரான பணிகளை மேற்கொள்ளக் கூடிய அமைப்பாக செயல்பட்டு வந்தது. மேலும், இஸ்ரேல் வழங்கும் நிதியுதவி நிகழ்வுகளை நிலைநிறுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது.
தற்போது இந்த அமைப்பு இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ஆதரவை அமெரிக்கா திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு அமெரிக்க வளாகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் யூத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முறியடிப்பதையும், போலீசை அதிகாரத்தை பயன்படுத்தி யூத எதிர்ப்பு விவகாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலுக்கான ஆதரவைக் குறைத்து, வரவிருக்கும் அதிபர் தேர்தல்களில் இஸ்லாமிய அமெரிக்க மக்களின் வாக்குகளை ஈர்க்க அதிபர் பைடன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாவதாக ராபாவை தாண்டி இஸ்ரேல் மேற்கொண்டு தனது போர் எல்லைகளை விரிவுபடுத்த திட்டமிடும் போதும், இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆயுதங்கள், வெடி மருந்து உள்ளிட்ட ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து பிரபல தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த அதிபர் பைடன், "ராபாவில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் மேற்கொண்டு ஆயுதங்கள், வெடிமருந்து எதுவும் வழங்கப் போவதில்லை" என தெரிவித்து இருந்தார்.
மேலும், ராபா உள்ளிட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த விரும்பும்பட்சத்தில் அதற்கு அமெரிக்கா துணை போகாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதயான்குவின் பெயரை குறிப்பிட்டு அதிபர் பைடன் தெரிவித்தது, ஈரானுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தடும் செய்தியாக அமைந்தது.
இதனிடையே, கத்தார் மற்றும் லெபனானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருகிறது. அதேநேரத்தில் இஸ்ரேலை பல முனைகளில் இருந்து ஈரான் ஆதரவு படைகள் தாக்கி வரும் போதிலும், ஈரானுக்கு வங்கப்பட்ட பொருளாதார தடை தள்ளுபடி நிலையை அமெரிக்க தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஈரானிடம் இருந்து ஈராக் மின்சார கொள்முதலை மேற்கொள்ள அமெரிக்கா காலாண்டு பொருளாதார தடை தள்ளுபடியை அறிவித்துள்ளது. மின்சார கொள்முதலுக்கான கட்டணம் ஓமானில் உள்ள வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் நிலையில் அதை ஈரான் யூரோவாக மாற்றிக் கொள்ள முடியும்.
மூன்றாவதாக, வெளிநாடுகளுக்கு வெடிமருந்து மற்றும் ஆயுதம் விநியோகிக்க தடை விதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய அதிபர் மாளிகை உத்தரவிட்டது. மேலும், இஸ்ரேல் போரின் போது சில சந்தர்ப்பங்களில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அதிபர் மாளிகை தரப்பில் குறிப்பிடப்படுகிறது.
மேலும் ராணுவ நடவடிக்கைகளால் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தணிப்பதற்கான சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துவதற்கான அறிவு, அனுபவம் மற்றும் கருவிகள் இஸ்ரேலிடம் உள்ளதாகவும் ஆனால் அதிக அளவிலான பொதுமக்கள் உயிரிழப்புகள் உள்பட அசம்பாவிதங்களை எல்லா சந்தர்ப்பங்களிலும் திறம்பட பயன்படுத்துதல் வேண்டும் என்றும் வெள்ளை மாளிகையில் தெரித்துள்ளது.
அமெரிக்க அதிபரின் இந்த திடீர் முடிவுகளால் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலாவதாக, அமெரிக்கா இனி இஸ்ரேலுக்கு எந்த உதவிகளையும் வழங்கப்போவதில்லை. இதுவரை இஸ்ரேல் தனது எதிர்ப்பாளர்களுக்கு எதிராக எப்படிச் செயல்பட்டாலும், அமெரிக்காவின் ஆலோசனைகளையும் கவலைகளையும் புறக்கணித்தாலும், தமக்கு அமெரிக்க ஆதரவு இருப்பதாக எப்போதும் கருதி வந்தது.
இரண்டாவதாக அதிபர் பைடன், நெருங்கி வரும் அதிபர் தேர்தலை முன்னிறுத்தி அமெரிக்க இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறார் அதற்காக இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆதரவை திருமப் பெறவும் அவர் தயாராக உள்ளார். மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்குள் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து அதிபர் பைடன் அரசு கவனித்து வருகிறது.
இஸ்ரேலிய படைகள் காஸாவில் உள்ள ராபா பகுதியில் தாக்குதலை நடத்தினால், அங்கு ஏற்படும் உயிரிழப்புகள் அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளை எதிர் போட்டியாளரான டிரம்ப்புக்கு ஆதரவாக அமையக் கூடும் என்பதை பைடன் தெளிவாக தெரிந்தவராக காணப்படுகிறார்.
அதேநேரம், இஸ்ரேலுக்கான ஆயுத சப்ளையை உடனடியாக நிறுத்தினால் யூத மக்கள் அதிபர் பைடனை புறக்கணிக்க நேரிடும். அதன் காரணமாக மோதல் போக்குகளை தவிர்க்குமாறு இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்போவதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். மேலும், யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை எதிர்தரப்புக்கு கைமாறிவிடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளில் பைடன் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
மூன்றாவதாக, காஸா மீதான போரில் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதயான்குவின் கொள்கைகள் அமெரிக்க வெள்ளை மாளிகையை சற்று விரக்திக்குள்ளாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக வெளியில் இருந்து கொண்டே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததாக கூறப்படுகிறது.