ஹைதராபாத்:வேளாண்மையை லாபகரமானதாக ஊக்குவிப்பதற்கு மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதை இந்தியா அதிகரிக்க வேண்டும். இறால், பால் பொருட்கள் மற்றும் பழங்கள் போன்றவற்றை கொண்ட தெலுங்கு மொழி மாநிலங்களில் அதிக லாபம் தரும் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்
வேளாண் முன்னெடுப்பு என்பது விவசாயிகள் பணம் ஈட்டுவதை உறுதி செய்கிறது. விவசாயிகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் பல காரணங்களால் பல்வேறு வேளாண் செயல்பாடுகள் லாபகரமாக செயல்படுவது என்பது நிச்சயமற்ற தன்மையைக் கொண்டுள்ளது.
இப்போது இந்தியா 50 பில்லியன் டாலர் அளவுக்கான வேளாண் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், இதில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் 15 சதவிகிதம் மட்டுமே உள்ளது. மீதம் உள்ள 85 சதவிகித ஏற்றுமதி என்பது வேளாண் மூலப்பொருட்கள் உற்பத்தியை கொண்டிருக்கிறது. நமது நாட்டின் ஏற்றுமதி மதிப்பீடு என்பது சீனா, அமெரிக்கா, நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி மற்றும் இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். இந்த நாடுகளின் ஏற்றுமதியில் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் 40 சதவிகித பங்கை வகிக்கின்றன.
வேளாண் மதிப்புக் கூட்டு கட்டமைப்புக்கான தரவுகள் (Image credits-ETV Bharat)) மதிப்பீடு அடிப்படையில் அந்த நாடுகள் சர்வதேச வேளாண் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தியா வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை 100 பில்லியன் டாலராக அதிகரிப்பது என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களில் பங்களிப்பாக குறைந்த பட்சம் 30 சதவிகிதம் இலக்கையாவது நாம் அவசியம் அடைய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் லாபமும் அதிகரிக்கும். உலகில் மாறிவரும் புவிசார் அரசியல் சமன்பாடுகளுடன், இந்தியா இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நாடுகளின் விருப்பத்தின் பேரிலான விநியோகிப்பாளராக மாற வேண்டும்.
மதிப்புக்கூட்டு கட்டமைப்பு என்றால் என்ன?
பண்ணையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் ஒவ்வொரு கட்டமைப்பிலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் சேர்க்கப்படுதல் என்பது வேளாண் உற்பத்தியில் தொடர் செயல்பாடுகளின் கட்டமைப்பாகும். இந்த கட்டமைப்பு மிகவும் சிறியதாக ஒவ்வொரு கட்டமைப்பிலுமான தொடர்பு என்பது அதன் செலவை அதிகரிக்கப்பதை விடவும் அதிக மதிப்பை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
இரண்டு தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களிலும் (ஆந்திர பிரதேசம், தெலங்கானா) உள்நாடு, ஏற்றுமதி சந்தை இரண்டிலும் மதிப்பு கூட்டல் கட்டமைப்பை முன்னெடுப்பது நீடித்து நிலைப்பதற்கான வாய்ப்பாக இருக்க முடியும். ஐடிசி நிறுவனமானது மிளகாய் மதிப்புக் கூட்டு கட்டமைப்பை இந்த இரு மாநிலங்களிலும் முன்னெடுத்திருக்கிறது. அதனை ஏற்றுமதிக்கும் அந்த நிறுவனம் உபயோகிக்கிறது. ஆனால், அதே நேரத்தில் பிற பொருட்களுக்கு இது மேற்கொள்ளப்படுவதில்லை. இதர மாநிலங்கள், நாடுகளுடன் ஒப்பிடும்போது வேளாண் உற்பத்தியில் எது நன்மை தரும் போட்டியாக இருக்கும் என்பதை ஒவ்வொரு மாநிலமும் அவசியம் தீர்மானிக்க வேண்டும். அதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வெளியில் அதிக வளர்ச்சி இலக்கை அடைய ஒவ்வொரு மாநிலமும் உத்திப்பூர்வமான திட்டத்தை வகுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆவது நிதிக்குழுவில் சமர்பிக்கப்பட்ட குறிப்பிட்ட பயிர்கள், மாநிலங்களுக்கு ஏற்ற திட்டங்கள் என்பதன் அடிப்படையிலான இந்தியாவின் வளர்ச்சி பெறும் வேளாண் ஏற்றுமதி என்ற தலைப்பிலான உயர்மட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை வாசிப்பது இந்த இரண்டு மாநிலங்களிலும் எந்த மதிப்பீட்டு கட்டமைப்பு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். இத்துடன் 2018ஆம் ஆண்டு மத்திய வணிக அமைச்சகம் பிரசுரம் செய்துள்ள வேளாண் ஏற்றுமதி கொள்கை என்ற ஆவணத்தின் தகவல்களும் உத்திப்பூர்வமான திசையை முன்னெடுப்பதில் மாநிலங்களுக்கு வழி காட்டுவதாக இருக்கும்.
இதில் உள்ள தரவுகள் மூலம், உலகில் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சி மூலம் 101 பில்லியன் டாலர் ஈட்டப்படுகிறது. இதில் அமெரிக்காவின் பங்கு 12 சதவிகிதமாகவும், இந்தியாவின் பங்கு வெறும் 1.6 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் கடல் உணவு சந்தை 97 பில்லியன் டாலராக இருக்கிறது. இதில் சீனா 14.5 சதவிகித பங்கையும், இந்தியா 4.6 சதவிகித பங்கையும் கொண்டிருக்கிறது. அடுத்ததாக பால் பொருட்கள் ஏற்றுமதி சந்தை என்பது 78 பில்லியன் டாலராக இருக்கிறது. இதில் நியூசிலாந்து 14.3 சதவிகித பங்களிப்பை கொண்டிருக்கிறது. இதில் இந்தியா மிகவும் குறைவாக 0.3 சதவிகிதம் மட்டுமே ஏற்றுமதி செய்கிறது.
பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள் ஆகியவை அடுத்ததாக 52 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் 15.6 சதவிகித பங்களிப்புடன் சீனா முன்னணியில் உள்ளது. இந்தியா இதில் 0.9 சதவிகித பங்கை மட்டுமே கொண்டிருக்கிறது. அடுத்ததாக கோழிகள், முட்டைகள் சந்தையில் 25 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடைபெறுகிறது. இதில் அதிகபட்சமாக பிரேசில் 22 சதவிகித ஏற்றுமதி செய்து ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் இந்தியா 0.2 சதவிகிதம் மட்டுமே ஏற்றுமதி செய்கிறது. இது போன்ற தரவுகளை இரண்டு மாநிலங்களும் ஆய்வு செய்து இதில் உள்ள வாய்ப்புகளை கண்டறிய வேண்டும்.
ஆந்திர பிரதேசத்தில் நீண்ட கடற்பகுதி உள்ளது. இங்கு இறால் உற்பத்திக்கான வாய்ப்புகளை கண்டறிய முடியும். பால் பொருட்கள் இரு மாநிலங்களிலும் உள்ளன. தெலங்கானாவில் கோழி வளர்ப்பு, முட்டைகள் உற்பத்தி ஆகியவை வலுவான நிலையில் உள்ளன. பழங்கள், காய்கறிகள் இரு மாநிலங்களிலும் வளர்க்கப்படுகின்றன. எருமை இறைச்சி இருமாநிலங்களிலும் சாத்தியமான ஒன்றாகும்.
இந்த சந்தைகளில் இரண்டு மாநிலங்களும் எந்த இடத்தில் உள்ளன?
வேளாண் பொருட்களில் இந்திய ஏற்றுமதி என்பது அரிசி, இறால் ஆகியவை ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கின்றன. நாற்றாக வளர்த்து பின்னர் அதனை வயலில் நடுவது என நெல் உற்பத்தியில் அதிக தண்ணீர் உபயோக சூழல் என்பது நீண்டகாலத்துக்கு நீடித்திருக்கக் கூடிய ஏற்றுமதி உத்தியாக இருக்குமா? அரிசி உற்பத்தியில் நாற்றங்காலில் இருந்து பின்னர் வயலில் நடும் முறையை கைவிட்டு நேரடி விதைப்பை மேற்கொண்டு ஏற்றுமதி நோக்கத்துக்காக குறைந்த தண்ணீரை பயன்படுத்தலாமே?
70 சதவிகித இந்திய ஏற்றுமதி என்பது அருகாமையில் உள்ள சந்தையை சார்ந்திருக்கிறது. இவை அதிக விலை அளிக்கும் சந்தைகள் அல்ல. மதிப்பு மிக்க சந்தைகள் என்பது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர வளர்ச்சியடைந்த நாடுககளை சார்ந்து இருக்கிறது. இங்கெல்லாம் நமது ஏற்றுமதி என்பது 30 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. எனவேதான் நாம் இதனை இலக்காக கொள்ள வேண்டும். இதர அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளிடம் இருந்து எவ்வாறு அந்த நாடுகள் சந்தைகளை அணுகுகின்றன என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திராட்சை ஏற்றுமதி என்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சரியான சந்தைகளை இலக்காக கொள்ளுதல், உற்பத்தி மற்றும் தரத்தில் கவனம் செலுத்துதல், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடன் பணியாற்றுதல், வணிகப்பெயரிலான கட்டுமானம் மற்றும் இதே போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் இது சாத்தியமாகிறது.
வேளாண் மதிப்புக் கூட்டு கட்டமைப்புக்கான தரவுகள் (Image credits-ETV Bharat)) முக்கியமாக ஏற்றுமதி சந்தையில் 22 மதிப்பு கூட்டுதல் கட்டமைப்புகளில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. இவற்றில், 7 பொருட்களுக்கு அதிக பட்ச முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தேர்வின் போது அளவு, உலகளாவிய போட்டி தன்மை, ஏற்றுமதி மதிப்பு, சாத்திய கூறு மற்றும் இதர கருத்தாக்கங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இந்த இரண்டு தெலுங்கு மாநிலங்களும் இதே போன்ற தகுதிகளை அவசியம் உபயோகித்து தங்களின் மாநிலங்களுக்கான விருப்பங்களாக மதிப்புக் கூட்டு கட்டமைப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.
அரிசி, இறால், பழங்கள், காய்கறிகள், எருமை இறைச்சி, மசாலா பொருட்கள், முந்திரி பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய், தேன், வாழை, பருத்தி, மா ஆகிய சில மதிப்பு கூட்டு கட்டமைப்புகள் இரண்டு மாநிலங்களுக்கும் ஏற்றவையாக கண்டறியப்பட்டுள்ளன. ஏற்றுமதி முன்னெடுப்புக்காக மேற்குறிப்பிட்டப்பட்ட பட்டியலில் கூறப்பட்ட தகுதியின் படி இந்த மாநிலங்கள் கோழிகள், முட்டை, பால் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் அடையாளம் காணலாம். ஆர்கானிக் உணவு ஏற்றுமதி, இயற்கை பண்ணை உணவு ஏற்றுமதி மற்றும் அதே போன்ற இதர பகுதிகளையும் இந்த திட்டத்தில் சேர்க்கலாம். உள்நாட்டு சந்தையில் சரி சமமாக ஈர்க்கப்படக் கூடிய பொருட்களையும் எடுக்க முடியும்.
இந்த வணிகத்தை கட்டமைப்பதில் முன்கணிக்கப்பட்ட நீடித்த கொள்கை ஆதரவு அளித்தல்,தனியார் பங்களிப்பின் மூலம் மதிப்புக்கூட்டு வாய்ப்புகளை அளித்தல், உற்பத்தி மற்றும் தரத்தை அதிகரிக்க நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை உபயோகித்தல், உற்பத்திக்கான தொகுப்புகளை அமைத்தல் ஆகியவை முக்கியமானவையாகும். இந்த வாய்ப்புகளை கைப்பற்ற 10 ஆண்டு உத்திப்பூர்வமான திட்டத்தை அவசியம் மேற்கொள்ள வேண்டும். ஒரே இரவில் அனைத்தும் சாத்தியம் ஆகாது. 2030ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கான முறையை தீவிரமாக மேற்கொண்டு இரண்டு மாநிலங்களும் இதனை செயல்படுத்த வேண்டும்.
-ராம் கவுண்டின்யா
(பொறுப்புதுறப்பு இந்த கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகள் எழுத்தாளரை சார்ந்ததாகும். இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகள், உண்மைகள் ஈடிவி பாரத்தின் கண்ணோட்டத்தை பிரதிபலிப்பவை அல்ல)