தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

பச்சை குத்திய நபர்கள் இரத்த தானம் செய்யலாமா? ரெட் வெல்வெட் கேகின் நிறத்திற்கு பூச்சி காரணமா? - INTERESTING FACTS

கேக்குகள், பேஸ்ட்ரிகள் மற்றும் பிஸ்கட்களில் சிவப்பு நிறத்திற்குப் பயன்படுத்தப்படும் சாயம், கோச்சினல் (Cochineal) எனப்படும் பூச்சிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 31, 2025, 4:29 PM IST

தினசரி, ஏன்? எதற்கு? போன்ற என்னற்ற கேள்விகள் அனைவரது மனதிலும் தொடர்ந்து எழுந்துகொண்டு தான் இருக்கிறது. எத்தனை கேள்விகள் எழுந்தாலும், அதற்கு விடையை தேடாமல் சில நேரங்களில் கடந்து செல்கிறோம். அந்த வகையில், ரெட் வெல்வெட் கேகின் பின்னணியில் இருக்கும் நிறத்திற்காக காரணம் என்ன? இந்தியா தொலைப்பேசி எண்கள் +91 என தொடங்குவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு இந்த பதிவில் பதிலை காணலாம்.

  • தொலைப்பேசி எண்களுக்கு முன்னாள் வரும் +91 குறியீடு எதற்காக..?

நீங்கள் வெளிநாட்டில் உள்ளவர்களின் தொலைப்பேசி எண்களை கவனித்தால் அவை +1 என்றும் இந்தியாவில் +91 என தொடங்கும். எதற்காக இந்த குறியீடு வழங்கப்படுகிறது என நினைத்திருக்கிறீர்களா?

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கு என தனி குறியீடு ஒதுக்கப்பட்டு அதை, தொலைப்பேசி எண்ணுக்கு முன்பாக சேர்த்து டயல் செய்ய வேண்டும். இந்த குறியீடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் வழங்கப்படும்.

கோப்புப்படம் (Credit - Getty Images)

காரணம் என்ன?:மக்கள் தொகை, பொருளாதார முக்கியத்துவம், தகவல் தொடர் தொடர்பான காரணங்களை வைத்து உலகத்தை 9 மாண்டலங்களாக சர்வதேச தந்தி மற்றும் தொலைப்பேசி ஆலோசனைக் குழு, பிரித்து நாட்டில் குறியீடு பட்டியலை உருவாக்கியது.

இதில், மத்திய,தெற்கு, மேற்கு, மத்திய கிழக்கு ஆசியா நாடுகள் 9வது மண்டலத்தில் வந்தன. இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து நாடுகளின் குறியீடும் 9ல் தான் தொடங்கும். எனவே, இந்தியா +91 என்பதை குறியீடாக பெற்றது. அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒற்றை இலக்க கோடுகளும் (+1), சிறிய நாடுகளுக்கு 3 இலக்க எண்களை கொண்ட குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • பச்சை குத்தினால் இரத்த தானம் செய்ய முடியாதா?

பச்சை குத்தியவர்கள்/டாட்டூ குத்தியவர்கள் இரத்த தானம் செய்யலாமா? என்ற கேள்வி தொடர்ந்து நீடிக்கிறது. அது உண்மைதானா? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..பச்சை குத்தியவர்கள் ரத்த தானம் செய்ய தடை ஏதும் கிடையாது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

ஆனால் அவர்களுக்கு சிறுதி கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. டாட்டூ போட்டுக்கொண்டவர்கள் 6 மாதம் கழித்தும், பல் சிகிச்சையில் சிறிய நடைமுறை ஏதும் செய்திருந்தால் 24 மணி நேரம் கழித்தும் இரத்த தானம் செய்யலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

கோப்புப்படம் (Credit - Getty Images)
  • ரெட் வெல்வட் கேக்கில் இருக்கும் அடர் சிவப்பு நிறம் பூச்சியிலிருந்து கிடைப்பது என்பது தெரியுமா?

கேக்குகள், பேஸ்ட்ரிகள் மற்றும் பிஸ்கட்களில் சிவப்பு நிறத்திற்குப் பயன்படுத்தப்படும் கேரமின் சாயம், கோச்சினல் (Cochineal) எனப்படும் பூச்சிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இவை குறிப்பாக முட்கள் நிறைந்த கற்றாழை செடிகளில் வளர்க்கப்படுகின்றன. பின்னர் அது பதப்படுத்தப்பட்டு தூள் வடிவில் பயன்படுத்தப்படுகிறது.

இது உணவுப் பொருட்களில் மட்டுமல்லாமல், லிப்ஸ்டிக் (Lipstick) போன்ற அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் வாங்கும் உணவின் பேக்கேஜிங்கில் கேரமின் அல்லது E120 எனக் குறிப்பிட்டால், இந்தப் பூச்சி பயன்படுத்தப்பட்டது என்று அர்த்தம். இருப்பினும், இது FSSAI ஒப்புதல் பெற்ற பின்னரே உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும். இது கிட்டத்தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்பு துணிகளுக்கு சாயமிடப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தெரிந்து கொள்ளுங்கள்: கருவுறுதல் பற்றிய கட்டுக் கதைகளும்... உண்மைகளும்...! - Fertility Myths

ABOUT THE AUTHOR

...view details