டீ போடுவதெல்லாம் ஒரு விஷயமா? பாலில் டீ தூள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டினால் டீ ரெடி என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அனால், அது தான் இல்லை. எப்படி ஒவ்வொரு சமையலுக்கும் ஒரு பக்குவம் இருக்கிறதோ, அதே போl டீ போடுவதற்கு என ஒரு பக்குவம் இருக்கிறது. டீ போடும் போது, வெறும் டீ தூள் மட்டும் சேர்க்காமல், அதனுடன் சில பொருட்களை சேர்த்தால் அச்சு அசலாக டீ கடையில் குடிப்பது போல வீட்டில் டீ போடலாம். அது எப்படி? என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- பால் - 1 டம்ளர்
- தண்ணீர் - 1 டம்ளர்
- டீ தூள் - 1 டீஸ்பூன்
- ஏலக்காய் - 2
- இஞ்சி - 1 சின்ன துண்டு
- சர்க்கரை - தேவையான அளவு