தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

வீட்டில் புதினா செடி வளர்ப்பது எப்படி? குரோ பேக், பூந்தொட்டி இந்த அளவில் இருக்கணும்! - HOW TO GROW PUDINA AT HOME

அகலமான தொட்டி அல்லது 12 இன்ச் குரோ பேக்கில் புதினா தண்டுகளை நட்டு வைத்தால் அதிக இலைகளுடன் புதினா செழிப்பாக வளரும். வீட்டில் புதினா செடி வளர்ப்பதற்கான டிப்ஸ்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 27, 2024, 11:35 AM IST

வீட்டு தோட்டம் அமைக்க வேண்டும் என நினைப்பவர்கள், புதினா செடியில் இருந்து வளர்ப்பை தொடங்குவது சிறந்த ஆரம்பமாக இருக்கும். செடி வளர்ப்பதற்கு பெரிய இடம் இல்லை என சொல்பவர்கள் வீட்டின் ஜன்னல்களில் கூட புதினாவை வைத்து வளர்க்க முடியும். அது எப்படி? புதினா வளர்ப்பதற்கான உரங்கள் என்ன? போன்ற முழு விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

தரமான தண்டுகள்: சமையலில் புதினா இலைகளைப் பயன்படுத்திவிட்டு, குப்பை என வழக்கமாக நாம் தூக்கி எரியும் தண்டு போதும், புதினா வளர்ப்பை மேற்கொள்வதற்கு. முதலில், 3 தரமான புதினா தண்டுகளை எடுக்கவும். இரண்டாகக் கிளைத்திருக்கும் புதினா தண்டு என்றால் கூடுதல் சிறப்பு . இப்போது, தண்டின் அடிப்பகுதியில் உள்ள இலைகளை நீக்கிவிட்டு, மேலே இரண்டு இலைகள் மட்டும் விட்டு வைக்கவும்.

வாட்டர் மெத்தட்: இப்போது ஒரு கண்ணாடி டம்ளரில், பாதியளவு நீர் எடுக்கவும். அதில், நாம் எடுத்து வைத்துள்ள தண்டுகளை வைத்து, டம்ளரில் உள்ள நீரை இரண்டு நாள்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொள்ள வேண்டும்.

புதினா செடி வளர்ப்பில் வாட்டர் மெத்தட் தேர்ந்தெடுப்பது சிறந்தது (Credit - ETVBharat)

மண்ணில் நடும் முறை: மூன்று முதல் நான்கு நாட்களுக்கு பின்னர், புதினா தண்டுகள் வேர் விட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதே போல, பத்து நாட்களுக்கு வைத்து விடுங்கள். பின்னர், இந்த தண்டுகளை மண்ணில் நட வேண்டும். புதினா படர்ந்து வளரக்கூடியது என்பதால், புதினா வளர்ப்புக்கு எப்போதும், அகலமான தொட்டி அல்லது 12 இன்ச் குரோ பேக் பயன்படுத்த வேண்டும்.

அறுவடை : இப்போது, வேர் விட்டிருக்கும் புதினா தண்டுகளை மண்ணில் ஊன்றி, தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும். தொட்டியில் வைத்ததும், புதினா சாய்ந்தது போல் இருக்கும். ஆனால், சிறிது நேரம் கழித்து எழுந்து நின்று விடும். செடியை தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டால் 3 வாரங்களில் அதிக இலைகளுடன் செழிப்பாக வளர்ந்திருக்கும்.

மண் கலவை?:

  1. புதினா வளர்ப்புக்கு தொட்டியில், 50% கோகோ பீட் (தேங்காய் உமி), 30% வெர்மி கம்போஸ்ட், 20 % செம்மண் எனக் கலந்து தயாரிக்க வேண்டும். செம்மண் கிடைக்கவில்லை என்றால் கோகோ பீட் மற்றும் வெர்மி கம்போஸ்ட் போதுமானது.
  2. புதினா தண்டுகளை மண்ணில் நட்டு வைத்த 45வது நாளில், அறுவடை செய்யலாம். புதினா செடியை நேரடியான சூரிய ஒளியில் வைக்கக்கூடாது. நாம், மேலே குறிப்பிட்டுள்ள வாட்டர் முறையை பின்பற்றினால், செடி கண்டிப்பாக அதிக இலைகளுடன் செழிப்பாக வளரும்.

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details