ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளின் பட்டியலில் இந்த பேன், ஈறு பிரச்சனையும் ஒன்று. கருகருவென நீளமான முடி வேண்டும் என ஆசைப்படும் அனைவரும் இந்த பேன் பிரச்சனையையும் சமாளித்து தான் முடியை வளர்க்க வேண்டும். தலையில் ஒரு பேன் இருந்தாலும், அது ஏற்படுத்தும் அரிப்பை அனுபவித்தால் தான் அதன் வேதனை புரியும். இப்படி, நீங்களுக்கு பேன் தொல்லையால் அவதிப்பட்டால் இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து பாருங்கள்..
பூண்டு சாறு: உங்கள் முடி அடர்த்திக்கு தகுந்தவாறு பூண்டுகளை எடுத்து நன்றாக அரைத்து அதன் சாற்றை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த சாற்றை முடியின் வேர்களில் நன்றாக தேய்த்து 2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் தலைக்கு குளித்தால் பேன்கள் நீங்கும். பூண்டு சாற்றில் உள்ள எரியும் தன்மை பேன்களை நீக்க உதவியாக இருக்கிறது.
கற்றாழை மற்றும் வேப்பிலை:தேய்காய் எண்ணெயில் கற்றாழை மற்றும் வேப்பிலையை சேர்த்து காய்ச்சி ஆற வைத்து, வடிகட்டி முடியின் வேர்களில் தேய்த்து 2 மணி நேரத்திற்கு பின் குளித்தால் பேன்கள் நீங்கும்.
கிராம்பு + வேப்ப எண்ணெய்: 10 முதல் 12 கிராம்பை பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், இந்த பொடியில் 2 டேபிள் ஸ்பூன் வேப்ப எண்ணெய் கலந்து முடியின் வேர்ப்பகுதி மற்றும் முடிகளில் நன்றாக தேய்த்து 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என ஒரு மாதம் செய்தால் பேன்கள் முற்றிலுமாக நீங்கி விடும்.
பேன் மருந்து: தலையில் உள்ள பேன்களை நீக்குவதற்கு என மருந்து கடைகளில் ஷாம்புக்கள் கிடைக்கின்றன, அதனை பயன்படுத்தலாம். ஆனால் இவற்றை ஒரு முறை பயன்படுத்திய பின்னர், 7 நாட்கள் அல்லது 10 நாட்களுக்குள் மறுபடியும் பயன்படுத்த வேண்டும். இந்த மாதிரி 2 முதல் 4 மாதங்களுக்கு பயன்படுத்தினால் பேன்கள் மற்றும் ஈறுகள் முற்றிலுமாக நீங்கும்.
பேன் சீப்பு: இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பேன் சீப்பை பயன்படுத்தி முடியை வாரி வருவது ஒரு சிறந்த தீர்வாகும். எந்த கெமிக்கலும் இல்லாமல், பேன்களை நீக்க இதுவே சிறந்த முறை என்கின்றனர் மருத்துவர்கள்.