குளிர்காலத்தில் சருமம் வறண்டும் போகும் போது பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. பொதுவாகவே, போதிய பராமரிப்பு இல்லாததாலும், ஆரோக்கிய பிரச்சனைகளால் பலருக்கும் பாத வெடிப்பு ஏற்படுகிறது. இது குளிர் காலத்தில் இரண்டு மடங்காகிறது. இந்த பிரச்சனையை வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே சரி செய்யலாம்..வாங்க பார்க்கலாம்..
தேன்: சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கும் ஆற்றலாகவும், இயற்கையான கிருமி நாசினியாகவும் தேன் செயல்படுகிறது. அந்த வகையில், தேனை தினமும் இரவில் வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் வெடிப்பு நாள்பட மறையும்.
அதே போல, ஒரு டப்பிள் சிறிது வெந்நீருடன் 5 ஸ்பூன் தேனை ஊற்றி நன்றாக கலக்கவும். இப்போது, உங்கள் பாதம் நன்றாக மூழ்கும் வரை இந்த நீரில் வைக்கவும். 20 நிமிடங்களுக்கு பின்னர் பாதத்தை நன்றாக மசாஜ் செய்யுங்கள். இதை வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால் 15 நாட்களில் பலன் தெரியும்.
வெஜிடபிள் ஆயில்:வெஜிடபிள் ஆயிலில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ உள்ளதால், இதனை தினசரி பயன் படுத்தும் போது தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்குகிறது. குறிப்பாக, கால் வெடிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதில் தாவர எண்ணெய் பயனுள்ளதாக இருக்கிறது.
இரவில் படுக்கும் முன், கால்களை நன்றாகக் கழுவிய பின், வெடிப்பு உள்ள இடத்தில் தாவர எண்ணெயைத் தடவவும். தூங்கும் போது சாக்ஸ் அணியுங்கள். இதை தினமும் செய்து வந்தால் வெடிப்பு ஏற்படும் பிரச்சனை சரியாகும்.
அரிசி மாவு மற்றும் தேன்:அரிசி மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி மென்மையாக இருக்க செய்கிறது. மூன்று ஸ்பூன் அரிசி மாவுடன் ஒரு ஸ்பூன் தேன் எடுத்து அதனுடன் ஐந்தாறு சொட்டு வினிகரை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை பாதத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஸ்க்ரப் செய்து கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்து வந்தால், வெடிப்புகள் நீங்கும்.
எலுமிச்சை: ஒரு டப்பிள் சிறிது தண்ணீர் எடுத்து அதில் இரண்டு எலுமிச்சை பழ சாற்றை சேர்க்கவும். பிறகு அதில் பாதத்தை வைத்து 20 நிமிடங்களுக்குப் பிறகு, வெடிப்புள்ள பகுதிகளை ஒரு பியூமிஸ் ஸ்டோன் கொண்டு நன்கு தேய்க்கவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் ஒரு மாதத்தில் வெடிப்புகள் நீங்கும்.
பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்