தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

சூரிய நமஸ்காரத்தில் இவ்வளவு நன்மைகளா? தினசரி 3 முறை செய்தால் போதும்! - SURYA NAMASKAR BENEFITS

தினசரி 3 முறை சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது முதல் உடலில் தேங்கியிருக்கும் நச்சுகளை நீக்குவது, எடை இழப்பு மன தெளிவு போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

By ETV Bharat Lifestyle Team

Published : 8 hours ago

12 படி வடிவத்தை உள்ளடக்கியுள்ள சூரிய நமஸ்காரம் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பது மட்டுமல்லாமல், மனம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்கிறது. காலை, சூரியன் உதிக்கும் போது, கிழக்கு திசையை நோக்கி செய்யும் இந்த பயிற்சி மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனமாகும் போதும் செய்யப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த ஆரம்பிப்பவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்.

இன்றே தொடங்குங்கள்:ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட உடல் திறன் இருப்பதை நினைவில் கொண்டு, மூன்று சுற்றுகளுடன் சூரிய நமஸ்காராம் செய்ய தொடங்குங்கள். தினசரி, 3 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் போது படிப்படியாக வலிமையையும் நம்பிக்கையையும் உருவாகும். அந்த வகையில், சூரிய நமஸ்காரத்தின் 12 படி வடிவம் என்னென்ன? மற்றும் தினசரி இந்த பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சூரிய நமஸ்காரத்தின் 12 நிலைகள் என்னென்ன?

1. பிரணாமாசனம்

2. ஹஸ்த உட்டனாசனம்

3. உட்டனாசனா

4. அஸ்வ சஞ்சலனாசனம்

5. பாலக்காசனா

6. அஷ்டாங்க நமஸ்காரம்

7. புஜங்காசனம்

8. பர்வதாசனம்

9. அஸ்வ சஞ்சலனாசனம்

10. உட்டனாசனா

11. ஹஸ்த உட்டனாசனம்

12. பிரணாமாசனம்

சூரிய நமஸ்காரம் நன்மைகள்:

தசைகள் மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்தும்:சூரிய நமஸ்காரம், உடல் முழுவதும் உள்ள பல்வேறு தசை மற்றும் மூட்டின் தொடர்ச்சியான இயக்கங்களை உள்ளடக்கியது. தொடர்ச்சியாக இந்த பயிற்சி செய்து வர, தசை வலிமை மற்றும் மூட்டு நிலைத்தன்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:சூரிய நமஸ்காரம் முக்கிய உள் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும். அதிகரித்த இரத்த ஓட்டம் மற்றும் சீரான ஆக்ஸிஜன் சப்ளை, உடலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்குகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கோப்புப்படம் (Credit - Getty Images)

இதையும் படிங்க:பாம்பு நாக்கு டாட்டூ உயிருக்கு ஆபத்தா? அசாதாரண டாட்டூக்களின் பின்னணி உளவியல் என்ன?

எடை இழப்பு:உடற்பயிற்சியின் தீவிர வடிவமாக இருக்கும் சூரிய நமஸ்காராம் எடை இழப்புக்கு கணிசமாக பங்களிக்கும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்பவர்கள், காலப்போக்கில் தங்கள் சுற்றுகளை அதிகரிக்கலாம். இது அதிக கலோரிகளை எரிப்பது மட்டுமல்லாமல், மேம்பட்ட வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

உடல் மற்றும் மனதை சமநிலைப்படுத்தும்:சூரிய நமஸ்காரம் செய்யும் போது, உடலும் மனமும் ஈடுபடுவதால், மனதிற்கும் உடலுக்கும் இடையே இணக்கமான தொடர்பை ஏற்படுத்துகிறது. இந்த சமநிலை ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது மற்றும் அமைதி உணர்வை ஊக்குவிக்கிறது.

தோல் மற்றும் முடி ஆரோக்கியம் அதிகரிக்கும்:சூரிய நமஸ்காரம் செய்யும் போது இரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதால், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கும். அதே வேளையில் பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கும்.

சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:தொடர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து வருவதன் மூலம் நுரையீரல் திறன் மற்றும் ஒட்டுமொத்த சுவாச செயல்பாட்டை மேம்படுத்தும். இந்த நடைமுறை சிறந்த ஆக்ஸிஜனேற்றத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது.

இதையும் படிங்க:

மாதவிடாய் முதல் நீரிழிவு வரை..வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

நெஞ்சு சளியை இரண்டே நாளில் கரைக்கும் அற்புத 'இலை'...இப்படி கஷாயம் செய்ங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ABOUT THE AUTHOR

...view details