தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜூன் முதல் ஜிபே சேவைகள் நிறுத்தம்! அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட கூகுள்! என்ன காரணம்? - அமெரிக்காவில் கூகுள் பே நிறுத்தம்

அமெரிக்காவில் கூகுள் பே சேவையை ஜூன் மாதம் முதல் நிறுத்துவதாகவும் வாடிக்கையாளர்கள் செயலியில் உள்ள வேலட் வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 10:27 PM IST

நியூயார்க் : கூகுள் நிறுவனத்தின் ஜி பே (G Pay) செயலி உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்த சேவையால் வங்கிக்குச் செல்லும் தேவையே பயனாளர்களுக்கு இல்லாமல் இருக்கிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே மற்றவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தை பெறவும் முடிகிறது.

இதனால் வங்கிப் பரிவர்த்தனைகள் மிகவும் எளிதாக முடிந்து விடுகின்றன. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஜி பே செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பெரும் டீக் கடைகள் தொடங்கி மிகப்பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் ஜி பே பயன்பாடு நடைபெற்று வருகிறது.

மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்காவிலும் பல லட்சக்கணக்கானவர்கள் ஜி பே செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் அமெரிக்காவில் ஜி பே செயலி நிறுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்காவில் மட்டும்தான் இந்த சேவை நிறுத்தப்படுவதாகவும் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வழக்கம் போல் அந்த சேவை பயன்பாட்டில் இருக்கும் என்றும், மற்ற நாட்டினர் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூகுள் நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது. மேலும் அமெரிக்காவில் கூகுள் பே ஆப் சேவை நிறுத்தப்பட்டாலும் அதில் உள்ள வசதிகளை கூகுள் வாலட் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பே செயலியை விட கூகுள் வாலட்டின் பயன்பாடு அமெரிக்காவில் மிக அதிகமாக இருப்பதால் தான் அமெரிக்காவில் மட்டும் கூகுள் பே ஆப் நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் ஜிமெயில் சேவையை கூகுள் நிறுத்த உள்ளதாக செய்திகள் பரவின. அதை முற்றிலும் மறுத்த கூகுள் நிறுவனம் அதுகுறித்து விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :உபி டிராக்டர் விபத்து: பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு! விபத்துக்கு இதுதான் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details