வாஷிங்டன்:உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்திய நாட்டின் நேரப்படி நவம்பர் 5ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இன்று நடக்கும் அமெரிக்க தேர்தல்:இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். புளோரிடா பல்கலைக்கழகத்தின் தேர்தல் ஆய்வகத்தின் படி இந்த தேர்தலில் நேரடி, தபால் ஓடுகள் என மொத்தமாக 78 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்த உள்ளனர்.
எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்:அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. அதில் இந்த தேர்தலில் முக்கியமான பங்கு வகிக்க கூடிய 7 மாநிலங்களுள் கவனத்தை ஈர்க்கும் மாநிலமாக பென்சில்வேனியா உள்ளது. அதிக பட்சமாக பென்சில்வேனியாவில் 19 தொகுதிகளும், வடக்கு கரோலினா மற்றும் ஜார்ஜியாவில் தலா 16 தொகுதிகளும், மிச்சிகனில் 15 தொகுதிகளும், அரிசோனாவில் 11 தொகுதிகளும், விஸ்கான்சினில் 10 தொகுதிகளும், நெவாடாவில் 6 தொகுதிகளும் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் 50 மாநிலங்களில் மொத்தமாக 538 தொகுதிகள் உள்ளன. அதில் 270 தொகுதிகள் அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுபவர் வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
இதையும் படிங்க:“பிரதமர் மோடி எனது வீட்டு கணபதி பூஜைக்கு வந்ததில் தவறில்லை!”- தலைமை நீதிபதி விளக்கம்!
விறுவிறு தேர்தல் களம்:கடந்த பல ஆண்டுகளாக நடந்த அமெரிக்க தேர்தல்களை விட இந்த முறை நடைபெறும் அமெரிக்க தேர்தல் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக உள்ள கமலா ஹாரிஸ் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் தான் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராவர், முதல் கருப்பின பெண் அதிபரும் ஆவார். அதுமட்டுமின்றி தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் அதிபராக பதிவியேற்று சரித்திரம் படைப்பார்.
ஓய்ந்தது பிரச்சாரம்: தேர்தலை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி சார்ப்பில் பரபரப்பான தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்தது.
டிரம்ப்:முன்னதாக பிட்ஸ்பர்க்கில் பேரணியில் டிரம்ப் கூறுகையில், “ நான்கு ஆண்டுகளாக அமெரிக்க மக்கள் பேரழிவு, தோல்வி, துரோகம் மற்றும் அவமானத்தை" சந்தித்துள்ளனர். “பலவீனம், திறமையின்மை, சரிவு மற்றும் சிதைவு ஆகியவற்றிற்கு நாம் தீர்வு காண வேண்டிய நேரத்தில் உள்ளோம். நாளை உங்களது வாக்கினால் நமது நாட்டை மீட்டு கொள்ளுங்கள், உலகம் பொற்றும் வகையில் அமெரிக்காவை உருவாக்குவோம்! " என்று டிரம்ப் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
கமலா ஹரிஸ்: மேலும் தற்போதைய துணை அதிபர் கமலா காரிஸ்பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் கூறுகையில், “ பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். ஒற்றுமையால் நாட்டின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்”. “இது உங்களுக்கு எனது உறுதிமொழி- ஒரு அதிபராக உங்கள் அனைவரின் சார்பில் போராட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், அந்த பொறுப்புக்கு தடையாக உலகில் எதுவும் இருக்காது”. "நம் மக்கள் அனைவரும் ஒன்றாக எழுகிறோம் அதுதான் நமது பலம், ”என கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்