தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ரஷ்யாவுக்கு விமான தொழில்நுட்பங்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாகக் குற்றச்சாட்டு...அமெரிக்காவில் இந்தியர் கைது! - US CHARGES INDIAN NATIONAL

இந்தியா வழியே விமான உதிரிபாகங்களை ரஷ்யாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (Image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 9:49 AM IST

வாஷிங்டன்:அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் ரஷ்யாவுக்கு சட்டவிரோதமாக விமான உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவில் இருந்து விமான உதிரி பாகங்களை ரஷ்யாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக சஞ்சய் கவுசிக் என்ற 57 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் மியாமியில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கடந்த 21ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு மறுசீரமைப்பு சட்டத்தை மீறி ரஷ்யாவுக்கு பொதுபோக்குவரத்து மற்றும் ராணுவம் என இரட்டை பயன்பாடு கொண்ட விமான உதிரி பாகங்களை சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்றுமதி குறித்த தவறான ஆவணங்களுடன் நேவிகேஷன் மற்றும் விமான கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றை அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் இருந்து வாங்கி அதனை அவர் இந்தியா வழியே ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளார்.

இதையும் படிங்க :மீண்டும் பிரிகிறதா அதிமுக..? திருநெல்வேலி அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் கைகலப்பு..!

இந்த வழக்கில் சஞ்சய் கவுசிக் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமும் செலுத்த நேரிடும். 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் விமான உதிரி பாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்து சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமான உதிரி பாகங்கள் அவரது இந்திய நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது என்று போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை இந்தியா வழியாக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கவுசிக் மற்றும் அவரது கூட்டாளிகள், விமானங்களுக்கான விமான கட்டுப்பாட்டு தரவு மற்றும் நேவிகேஷன் அளிக்கக்கூடிய அணுகல் முன்னெடுப்பு கருவியை அமெரிக்காவில் இருந்து வாங்கி இந்தியா வழியே ரஷ்யாவுக்கு அனுப்பி உள்ளனர். இதனை அவர்கள் ஒரேகான் மாநிலத்தில் இருந்து வாங்கி உள்ளனர்.

விமான கட்டுப்பாட்டு தரவு மற்றும் நேவிகேஷன் அளிக்கக்கூடிய அணுகல் முன்னெடுப்பு கருவியை ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவின் வணிகத்துறையிடம் இருந்து சில அனுமதிகளைப் பெற வேண்டும். எனவே இந்த கருவி கவுசிக்கின் இந்திய நிறுவனத்துகாக ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் இந்தியாவில் பொது போக்குவரத்து ஹெலிகாப்டரில் உபயோகிப்பட உள்ளது என்று கூறியும் அதனை வாங்கி ஏற்றுமதி செய்துள்ளனர். இவை இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது,"எனக் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details