தும்கா : இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பானீஷ் பெண் ஒருவர் தனது கணவருடன் ஜார்கண்ட் மாநிலம், பாகல்பூரில் இருந்து தும்காவிற்கு நள்ளிரைவில் பைக் ரெய்டு சென்று உள்ளார். நள்ளிரவு நெருங்கியதை அடுத்து ஹன்சிதா மார்க்கெட் பகுதியில் அந்த பெண் டென்ட் அடித்து தங்கி உள்ளார்.
இதனிடையே, அங்கு வந்த சில இளைஞர்கள் ஸ்பானீஷ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்பானீஷ் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், தன்னை சில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் கூறி உள்ளார்.