காத்மண்டு:நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஊழியர்கள் உள்பட 19 பேர் பயணித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி அளவில் விமானம் புறப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் தீ பற்றிய நிலையில், விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து மீட்பு தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக விமான விபத்தில் சிக்கிய 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்ற நிலையில் 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக நேபாள போலீசார் தெரிவித்துள்ளனர். விமான ஓட்டி 37 வயதான மனிஷ் ஷக்யா மீட்கப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சவுரியா விமான நிறுவனத்தின் plane 9N-AME (CRJ 200) என்ற விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.