ETV Bharat / international

“இஸ்ரேல் தாக்குதலில் தான் ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தளபதி மரணம்”- உறுதி செய்த ஹமாஸ்! - HAMAS CHIEF MOHAMMED DEIF DEATH

6 மாதங்களுக்கு முன் ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தளபதி முகமது தீஃப் காசாவில் நடந்த வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தினால் கொல்லப்பட்டதை ஹமாஸின் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா உறுதி செய்துள்ளார்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் வெளியிடப்பட்ட கிராஃபிக், ஹமாஸ் முன்னாள் தளபதி முகமது தீஃப்
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் வெளியிடப்பட்ட கிராஃபிக், ஹமாஸ் முன்னாள் தளபதி முகமது தீஃப் (Associated Press)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 1:06 PM IST

ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தளபதியான முகமது தீஃப் (Mohammed Deif), மூத்த தலைவர்கள் மர்வான் இசா (Marwan Issa), காசி அபு தமா'ஆ (Ghazi Abu Tama'a), ரேத் தாபெட் (Raed Thabe) மற்றும் ரஃபா சலாமா (Rafa Salama) ஆகியோரின் மரணத்தை ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா (Abu Obaida) உறுதி செய்துள்ளார்.

போர் தொடங்கிய தருணம்: ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்து வந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் 46,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோ் பெண்கள், குழந்தைகள் ஆவர்.

போர் நிறுத்த ஒப்பந்தம்: இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக இந்த போர் நடந்து வந்த நிலையில் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வந்தார். இதையடுத்து, இரண்டு வாரங்களாக, ஹமாஸ் காசாவில் மக்களுக்கு உதவியாகவும், பாதுகாப்பு அமைப்பாகவும் சீருடை அணிந்து, துப்பாக்கி ஏந்தி வடக்கில் உள்ள தங்கள் வீடுகளுக்கு இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களை வரவேற்று வருகின்றனர்.

“முன்னாள் தளபதி மரணம்” உறுதி செய்த ஹமாஸ்: இதற்கிடையே ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தளபதியும், அக்டோபர் 7 நடத்தப்பட்ட தாக்குதலின் மூளையாக செயல்பட்ட முகமது தீஃப் மரணம் குறித்து முதல் முறையாக ஹாமாஸ் மௌனத்தை கலைத்துள்ளது. அதில் ஆறு மாதங்களுக்கு முன் காசாவில் நடந்த வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தளபதியான முகமது தீஃப் கொன்றதை உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் ஜெட் விமானம் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி விபத்து...பயணிகள் 64 பேரின் நிலை என்ன?

மேலும் பாலஸ்தீன கைதிகள் விடுதலையின் போது நேரடி ஒளிபரப்புடன் நடத்தப்பட்ட செய்தி தொலைகாட்சியின் நேர்கானல் நிகழ்ச்சி ஒன்றில் ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா, முகமது தீஃப் இறப்பு மற்றும் காரணம் குறித்து விளக்கியதும் குறிப்பிடத்தக்கது.

முகமது தீஃப் யார்: இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலில் நீண்ட நாட்களாக முகமது தீஃப் முதலிடத்தில் இருந்த வந்தார் என கூறப்படுகிறது. மேலும், பல தசாப்தங்களாக முகமது தீஃப் பொது வெளியில் தனது முகத்தைக் காட்டாமல் இஸ்ரேலிய படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பி வந்தார். மேலும் இவர் போராளிகளிடையே மிகுந்த உத்வேகத்தை உருவாக்கியவராக பார்க்கப்படுகிறார். இதனால் இவரது மறைவு அந்நாட்டின் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் போராளிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.