லண்டன்:பிரிட்டனில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் 650 தொகுதிகளில், 412 தொகுதிகளைக் கைப்பற்றி தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கிறது. மேலும், கடந்த முறை ஆட்சியில் இருந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி (Conservative Party) 119 தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என அக்கட்சியின் தலைவரும், பிரிட்டனின் முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும், அவரது பிரியாவிடை உரையில் கூறியதாவது, "நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அக்கட்சியின் கெய்ர் ஸ்டார்மரை தொடர்பு கொண்டு, அவருக்கு எனது வாழ்துகளை தெரிவித்தேன். மேலும், ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் கைமாறியுள்ளது. நமது நாட்டின் எதிர்காலம் குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆட்சி அமைய வேண்டும்.