துபாய்: ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த ஜூன் மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் வெறும் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
ஈரான் வரலாற்றில் முதல் முறையாக 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது குறிப்பிடத்தக்கது. பதிவான வாக்குகளில் 42.5 சதவீத வாக்குகளை பெற்று சீர்திருத்த காட்சியைச் சேர்ந்த 69 வயதான ஈரான் முன்னாள் நிதி அமைச்சர் மசூத் பெசெஸ்கியன் முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தீவிர வலதுசாரி தலைவரான சயீது ஜலீலி 38.6 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார்.
ஆனால் ஈரான் சட்டப்படி வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் குறைந்தது 50 சதவீத வாக்குக்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதால் முதல் கட்ட தேர்தலில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்த இருவரையும் முன்னிறுத்தி நேற்று (ஜூலை.5) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் 49.8 சதவீத வாக்குகள் ஏறத்தாழ 3 கோடி வாக்குகள் பதிவானது.