மாஸ்கோ : ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி (வயது 47). அதிபர் புதினின் தீவிர எதிர்ப்பாளரான அலெக்சி நவால்னி, பிரிவிணைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். ஆர்டிக் சர்கிள் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Yamalo-Nenets மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் நவால்னி அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் இறப்பு இயற்கையானது இல்லை என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஷ்யாவின் அதிபர் புதினுக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுத்து வந்த காரணத்தினாலே அலெக்சி நவால்னி மீது பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.
விஷத் தாக்குதல் முதல் பல்வேறு விதமான தாக்குதல்களில் இருந்து தப்பிய அலெக்சி நவால்னி, தேச விரோதம், பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து சிறையிலும் அலெக்சி நவலானிக்கு பல்வேறு விதமான இடையூறுகள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.