தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

புனிதர் பட்டத்துக்கான நபர்கள் தேர்வு.. மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் ஆலோசனை! - POPE FRANCIS

புனிதர் பட்டத்துக்கான ஐந்து நபர்களை தேர்வு செய்யும் உத்தரவுக்கு போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக வாடிகன் தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ் (AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2025, 7:44 PM IST

ரோம்:இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் போப் பிரான்சிஸ், வாடிகன் வெளியுறவுத் துறை செயலாளர், தமது துணை அதிகாரி ஆகியோரை இன்று சந்தித்துப் பேசினார். புனிதர் பட்டத்துக்கான புதிய உத்தரவுகளுக்கும் அவர் அனுமதி அளித்துள்ளார். அவர்கள் புனிதர் பட்டம் பெறுவதற்கான தேதியை முடிவு செய்வதற்கான வழக்கமான சந்திப்பையும் போப் பிரான்சிஸ் மேற்கொண்டார்.

இதற்கிடையே, போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வாடிகன் தேவாலயம் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாக திங்கள்கிழமையன்று பிரார்த்தனை நடைபெற்றது.

போப் பிரான்சிஸ் வாடிகனில் இருக்கும்போது இதுபோன்ற பிரார்தனைகள் நடப்பது வழக்கம். வாடிகனின் புனிதர்களை அறிவிக்கும் அலுவலகத்தில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு போப் பிரான்சிஸ் தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறார். எனினும், எதிர்காலத்தில் புனிதர் பட்டம் பெறுபவர் என்ற உணர்வில் அதற்கான நபர்கள் தேர்வு என்பது முக்கியமாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க:கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்திற்கு வாழ்த்துகள் கூறிய நடிகர் ரஜினிகாந்த்!

அதே நேரத்தில் மருத்துவமனை தரப்பில் இன்று காலை வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'போப் பிரான்சிஸ் இரவில் நன்றாக உறங்கினார்,' என்று கூறப்பட்டிருக்கிறது. கடந்த திங்கள்கிழமை மாலை, இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் தொடர்ந்து அபாய கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். போப் பிரான்சிஸுக்கு மேற்கொள்ளப்பட்ட சில பரிசோதனை முடிவுகளை பார்க்கும்போது சிறிதே அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே வாடிகன் தரப்பில் வெளியிட்ட அறிவிப்பில், 'மருத்துவமனை அறையில் இருந்து போப் பிரான்சிஸ் தம் பணிகளை கவனிக்கிறார்,' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ' காசா நகரத்தில் உள்ள திருசபையை அவர் அழைத்தார்.' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு மழைக்கு இடையேயும் புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி போப் பிரான்சிஸ் நலம் பெற பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசியுள்ள வாடிகன் வெளியுறவுச் செயலாளர் கார்டினல் பியட்ரோ பரோலின் , "போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, உலகம் முழுவதிலுமிருந்து அவர் நலம்பெற பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்." என்றார்.

ABOUT THE AUTHOR

...view details