சென்னை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்(91) வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த இரா.சம்பந்தன். முதல் முறையாக 1977இல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1983 வரை பதவி வகித்தார். அதன் பின்னர் 2001 முதல் தற்போது இறக்கும் வரை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் உள்ளார்.
மேலும், இலங்கை தமிழர்கள் உரிமைக்காக பல ஆண்டுகளாக இலங்கை நாடாளுமன்றத்தில் முக்கிய குரலாக ஒலித்தார். கடந்த வயது மூப்பு காரணமாக சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரா.சம்பந்தன் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரா.சம்பந்தன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
அவருடன் நடந்த சந்திப்பிற்கான இனிய நினைவுகள் எப்போது என் நினைவில் இருக்கும். இலங்கையில் வாழும் தமிழர்களுகளுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் மரியாதையான வாழ்க்கையை ஏற்படுத்த இறுதி வரை பணியாற்றினார். இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு இது பேரிழப்பாகும்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொலைக்காட்சி விவாதத்தில் ஓங்கி ஒலித்த ட்ரம்ப் குரல்; அடக்கி வாசித்த பைடன்! - US Presidential Election 2024