ETV Bharat / international

சிரியாவில் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வுக்கு இந்தியா ஆதரவு! - SYRIA SITUATION

சிரியாவில் நிலவி வரும் சூழலை வெளியுறவுத்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும், பிராந்திய ஒற்றுமை, இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் அந்த நாட்டின் அரசியல் கட்சிகள் பணியாற்ற வேண்டும் என இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்
மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் (Image credits-IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2024, 4:39 PM IST

புதுடெல்லி: சிரியாவில் நிலவி வரும் சூழலை வெளியுறவுத்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும், சிரியாவின் பிராந்திய ஒற்றுமை, இறையாண்மை ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் அந்த நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் பணியாற்ற வேண்டும் என இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

சிரியாவின் அதிகாரத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில் பலதசாப்தங்களாக நீடித்து வந்த பாஷார் ஆசாத் ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. அமைதியான முறையிலான எல்லோரையும் உள்ளடக்கிய அரசியல் நடைமுறைகளை கொண்டு வருவதன் மூலம் அந்த நாட்டின் சூழல் வலுப்பெறும் என்று இந்திய வெளிறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிரியாவில் இப்போது நடைபெற்று வரும் சூழலை நாங்கள் கண்காணித்து வருகின்றோம். அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அந்நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, பிராந்திய ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க: "முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்கமாட்டேன்"..அவையில் சூளுரைத்த முதல்வர்! தீர்மானத்தின் மீது ஈபிஎஸ் எடுத்த முடிவு என்ன?

அமைதியான முறையிலான அனைவரையும் உள்ளடக்கிய, சிரிய சமூகத்தின் அனைத்துப் பிரிவின் எதிர்பார்ப்புகள், நலன்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் சிரியாவின் அரசியல் நடைமுறைகள் திகழ வேண்டும். சிரியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள இந்திய தூதரகம் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறது.

சிரிய கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸ் நகரை கைப்பற்றியதை அடுத்து 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த அதிபர் ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து ஆசாத், ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆசாத் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து சிரியா நாட்டை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தெருக்களில் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,"என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ரஷ்யாவுக்கான ஐநா துணை தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி இது குறித்து கூறுகையில், "சிரியா விவகாரம் குறிதது விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும்," என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.சிரியாவின் அதிபர் ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மாஸ்கோவுக்கு வந்ததை டாஸ் மற்றும் ஆர்ஐஏ அமைப்புகள் உறுதி செய்துள்ளன. கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்ததை நடத்திய நிலையில் அதிகாரத்தை மாற்றம் செய்வது அமைதியான முறையில் நடைபெறுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்த பின்னரே ஆசாத் சிரியாவில் இருந்து வெளியேறி உள்ளதாக முன்னர் ரஷ்யா கூறியிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.