லெங்குபி :மியான்மர் ராணுவ விமானம் மிசோரத்தில் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானதில் 6 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மியான்மரில் இருந்து விமானியுடன் சேர்த்து 14 பேருடன் சிறிய ரக ராணுவ விமானம் புறப்பட்டு உள்ளது. மிசோரம் மாநிலம் லெங்குபியில் விமானம் தரையிறங்க முயன்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 பயணிகள் படுகாயம் அடைந்ததாகவும் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் மிசோரம் போலீசார் தெரிவித்து உள்ளனர். விமானத்தில் பயணித்த மீதமுள்ள 8 பயணிகளும் எந்தவித உயிர்சேதமும் இன்றி உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.