தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் உடல் தகனம்! - R Sampanthan body buried - R SAMPANTHAN BODY BURIED

Sampanthan: மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சம்மந்தன் பூதவுடல் தகனம் செய்யப்படும் நிகழ்வில் அண்ணாமலை
சம்பந்தன் பூதவுடல் தகனம் செய்யப்படும் நிகழ்வில் அண்ணாமலை (Credits - ETV Bharat Tamil Nadu and annamalai X page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 9:25 PM IST

இலங்கை: மறைந்த இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் உடல் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்பட்டுள்ளது. அவரின் இறுதிச் சடங்குகளில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, இலங்கைக்கான இந்திய தூதரகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இரா.சம்பந்தன் கடந்த ஜூன் 30ஆம் தேதி இரவு தனது 91வது வயதில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதையடுத்து, திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர், இறுதிச் சடங்குகள் நடைபெற்று சம்பந்தனின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலி நிகழ்வில் பல்வேறு முக்கிய தலைவர்கள் உரையாற்றினர்.

அப்போது அதிபர் ரணில் விக்கிரமசிங்க பேசுகையில், "கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும், நாட்டை துண்டாடுவதற்கு இரா.சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என்றும், பிரிக்கப்படாத இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கே எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்ததாகவும்” அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

இந்நிலையில், அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக அவர் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்திருப்பது மறக்க முடியாதது” என ரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பூரி ஜெகநாதர் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி எனத் தகவல்! பலர் படுகாயங்களுடன் மீட்பு! - Puri Ratha Yatra

ABOUT THE AUTHOR

...view details