தெற்கு கரோலினா:அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆல்பா ஜெனிசிஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்த 43 குரங்குகள் தப்பித்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நேற்று காலை தனியார் பத்திரிக்கை நிறுவனத்திற்கு அலைபேசி மூலம் யெமாசி காவல்துறை தலைவர் கிரிகோரி அலெக்சாண்டர் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்," தெற்கு கரோலினாவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ரீசஸ் மக்காக் விலங்கினங்கள் இருக்க கூடிய ஆல்பா ஜெனிசிஸ் நிறுவனத்தின் உள்ள 43 குரங்குகள் வெளியேறின. ஒரு புதிய ஊழியர் குரங்குகளுக்கு உணவளிக்க சென்றபோது சரியாக கதவுகளை சரியாக பூட்டாமல் சென்றுள்ளதால், குரங்குகள் தப்பிச் சென்றுள்ளன.
அதில் தப்பி ஓடிய குரங்குகள் எந்த வகை நோயினாலும் பாதிக்கப்படாததால் மக்களுக்கு எதும் பாதிப்பு வராது. மேலும் வெளியேறிய அனைத்தும் பெண் குரங்குகள் மற்றும் குட்டி குரங்குகள் அவை இன்னும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படாதவை. பெரிய பெண் குரங்குகள் சுமார் 3 கிலோ எடை கொண்டவையாகும் எனம் அலெக்சாண்டர் கூறினார்.
அந்த பகுதியில் வசிப்பவர்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை பாதுகாப்பு கருதி மூடிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாரும் குரங்குகளை விளையாட்டாகக் கூட வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம். ஒருவேளை குரங்குகளைப் பார்த்தால் அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும்” என்றார்.
இதையும் படிங்க:அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற சபதம் எடுத்துள்ள டிரம்ப்...இந்தியா எதிர்பார்ப்பது என்ன?
இது குறித்து பேசிய ஆல்பா ஜெனிசிஸ் நிறுவனத்தின் முதல்வர் கூறுகையில், “பொதுவாக இந்த ஆல்பா ஜெனிசிஸ் நிறுவனம் விலங்களை கண்காணிக்கும் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. அதைவைத்து நிறுவத்தை சுற்றி 1.6 கிலோமீட்டர் வெளியேறிய விலங்குகளை தெர்மல் இமேஜிங் கேமராக்களைப் பயன்படுத்தி கண்காணிக்க முடியும். அதைவைத்து அங்கு பணியில் இருப்பவர்கள் விலங்குகளுக்கு பிடித்த உணவு மற்றும் பழங்களை கொடுத்து உள்ளே அழைத்து வருவார்கள். அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன” என்றார்.
ஜார்ஜியாவின் சவன்னா நகரில் 80 கிலோ மீட்டர் தொலைவில் ஆல்பா ஜெனிசிஸ் நிறுவனமானது கட்டப்பட்டது. ஏற்கனவே 2014ஆம் ஆண்டில் 26 விலங்கினங்களும், 2016ஆம் ஆண்டில் 19 விலங்கினங்களும், 2018ஆம் ஆண்டும் 12 விலங்குகளை தப்ப அனுமதித்ததற்காகவும், விலங்குகளுக்கு போதுமான தண்ணீர் வைக்காத காரணத்திற்காகவும் $12,600 டாலரை ஃபெடரல் அதிகாரிகள் அபராதமாக விதித்தனர்.
இதையடுத்து ஸ்டாப் (Stop Animal Exploitations ) என்ற விலங்குகளை பாதுகாக்கும் மையம் அமெரிக்க வேளாண்மைத் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் ஆல்பா ஜெனிசிஸ் நிறுவனம் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதை தவிர்க்க வேண்டும். இது போல் அவ்வபோது நிகழ்வதால் விலங்குகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைகின்றனர்” என குறிப்பிட்டிருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.