மாலே (மாலத்தீவு): மாலத்தீவு நாட்டின் 20வது நாடாளுமன்றத் தேர்தல், அந்நாட்டில் உள்ள 93 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. முன்னதாக மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்த விமர்சன கருத்து தெரிவித்தது. அந்நாட்டு அதிபர் முகமது முய்சுவின் சீனாவுடனான உறவு, இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
இதனிடையே, மாலத்தீவு நாட்டில் நடைபெற்ற இந்த தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்பட்ட நிலையில், அதிபர் முகம்மது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (People's National Congress) கட்சி பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. முன்னதாக, 86 தொகுதிகளின் முடிவுகள் வெளியான நிலையில், 66 தொகுதிகளை முய்சுவின் காட்சி (PNC) கைபற்றியது.
குறிப்பாக, முய்சுவின் கட்சி வெற்றி பெறத் தேவைப்படும் பெரும்பான்மையான 47 தொகுதிகளை விட 19 தொகுதிகள் அதிகமாகக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மாலத்தீவு இந்தியாவுடனான தொடர்பைத் தவிர்த்துவிட்டு, சீனாவின் பக்கம் சாய்ந்தாலும் அந்நாட்டு மக்களின் ஆதரவு பெற்றுள்ளதைக் காட்டுகிறது.
இதையும் படிங்க:எலான் மஸ்கின் இந்திய பயணம் திடீர் ஒத்திவப்பு! என்ன காரணம்?