வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரீஸ் செய்தியாளர்கள் சந்திபில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவுடன் தனது கலந்துரையாட போது அந்நாட்டுக்கான தனது ஆதரவு எப்போதும் இருக்கும் எனத் தெரிவித்ததாக கூறினார்.
இருப்பினும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் போர் நிறுத்தத்திற்கான பணிகளில் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாகவும் கூறினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்துரையாடி போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய வேண்டியது அறிவுறுத்துவதாக கூறினார்.
காசாவில் மக்கள் படும் துயரங்களை கண்டு அமைதியாக இருக்க மாட்டோம் என்றும், விரைவில் இரு தரப்பு சுமூக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்கும், பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்றார்.
காசாவில் பாலஸ்தீனியர்களின் துன்பங்கள் முடிவுக்கு வந்து, பாலஸ்தீன மக்கள் தங்கள் சுதந்திரம், கண்ணியம் மற்றும் சுய உரிமையைப் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்தப் போர் முடிவடையும் நேரம் நெருங்கிவிட்டதாக கமலா ஹாரீஸ் தெரிவித்தார்.