ஹைதராபாத்: 2024ஆம் ஆண்டு முடிவடைந்து 2025ஆம் ஆண்டு தொடக்கத்துக்காக பல உலகநாடுகள் காத்திருக்கின்றன. எனினும் இதில் கிரிமிதி தீவில் முதலிலும், நியூசிலாந்து நாட்டில் இரண்டாவதாகவும் புத்தாண்டு தொடங்கி உள்ளது.
உலகமே புத்தாண்டுக்காக காத்துக்கிடக்க சின்னஞ்சிறிய தீவான கிரிமிதியில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை வரவேற்ற முதல் தீவு என்ற பெயரை பெற்றுள்ளது. கிரிமிதி தீவு என்பது கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இது மத்திய பசுபிக் கடல் பகுதியில் உள்ளது.
இந்திய நேரப்படி எட்டரை மணி நேரத்துக்கு முன்பும், கிரீன்விச் சராசரி நேரத்துக்கு 14 மணி நேரத்துக்கு முன்பும் அங்கு புத்தாண்டு பிறந்துள்ளது. எனவே உலகநாடுகளில் முதலில் புத்தாண்டு கொண்டாட்டம் கிரிமிதியில் தொடங்கியுள்ளது. கிரிமிதி தீவில் உள்ளோர் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றுள்ளனர். தெருக்களில் உற்சாக கொண்டாட்டங்கள் களைகட்டயுள்ளன. புத்தாண்டை முன்னிட்டு அங்கிருக்கும் மக்கள் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிரிமிதி தீவைத்தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் சாதம் தீவுகளில் இந்திய நேரப்படி பிற்பகல் 4.30க்கு புத்தாண்டு பிறந்தது. இதையடுத்து பசுபிக் பிராந்தியத்தில் உள்ள டோகெலாவ் மற்றும் டோங்கா தீவுகளிலும் புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஒவ்வொரு நாடும் அந்தந்த நாடுகளின் பாரம்பரியப்படி உலக நாடுகளின் மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். ஹவாய், அமெரிக்காவின் சாமோவ் மற்றும் இதர அமெரிக்க பிராந்தியங்களில் மிகவும் தாமதமாக புத்தாண்டு பிறக்கிறது. இந்தியாவிலும், இலங்கையிலும் இன்று ஒரே நேரத்தில் நள்ளிரவு 2025ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கிறது.
இந்திய நேரப்படி 2025ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் நாடுகளும் நேரமும் பின்வருமாறு;
- பிற்பகல் 3.30 IST: கிரிபட்டி
- மாலை 4.30 IST நியூசிலாந்து
- மாலை 5.30 IST: பிஜி, ரஷ்யாவின் சிறிய பகுதிகள்
- மாலை 6.30 IST: ஆஸ்திரேலியாவின் முஷ்
- இரவு 8.30 மணி IST: ஜப்பான், தென் கொரியா
- இரவு 9.30 மணி IST: சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், பிலிப்பைன்ஸ்
- இந்தியா, இலங்கை (GMTக்கு 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக)
- காலை 1.30 மணி IST: ஐக்கிய அரபு எமிரேட், ஓமன், அசர்பைஜான்
- காலை 3.30 மணி IST: கிரீஸ், தென்னாப்பிரிக்கா, சைப்ரஸ், எகிப்து, நமீபியா
- காலை 4.30 மணி IST: ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, மொராக்கோ, காங்கோ, மால்டா
- காலை 5.30 மணி IST: இங்கிலாந்து, அயர்லாந்து, போர்ச்சுகல்
- காலை 8.30 IST: பிரேசில், அர்ஜென்டினா, சிலி
- காலை 9.30 மணி IST: புவேர்ட்டோ ரிக்கோ, பெர்முடா, வெனிசுலா, அமெரிக்க விர்ஜின் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்
- காலை 10.30 மணி IST: அமெரிக்க கிழக்கு கடற்கரை (நியூயார்க், வாஷிங்டன் டிசி, போன்றவை) பெரு, கியூபா, பஹாமாஸ்
- காலை 11.30 IST: மெக்சிகோ, கனடாவின் சில பகுதிகள் மற்றும் அமெரிக்கா
- பிற்பகல் 1.30 IST: அமெரிக்க மேற்கு கடற்கரை (லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, முதலியன)
- பிற்பகல் 3.30 IST: ஹவாய், பிரெஞ்சு பாலினீசா
- மாலை 4.30 IST: சமோவா