தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கன்வர் யாத்திரை பெயர் பலகை விவகாரம்: அமெரிக்காவின் கருத்தால் புது சர்ச்சை! - Kanwar Yatra Name Plate issue - KANWAR YATRA NAME PLATE ISSUE

கன்வர் யாத்திரை வழித்தடங்களில் உள்ள உணவகங்களில் உரிமையாளரின் பெயர்களை எழுதும் உத்தரவுக்கு உச்ச நீதிமன்ற விதித்த இடைக்கால தடை முறையாக செயல்படுத்தப்படவில்லை என அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
US State Department Spokesperson Matthew Miller (Photo credits: US State department)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 7:51 AM IST

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்கள் வழியே மேற்கொள்ளப்படும் கன்வர் யாத்திரையின் வழித்தடங்களில் உள்ள உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர் குறிப்பிடக் கோரியது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், கன்வர் யாத்திரை வழித்தடங்களில் உள்ள உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர்களை வைக்க இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த போதிலும், அந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

கன்வர் யாத்திரை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் அது தொடர்பான அறிக்கைகளை உற்று நோக்குவதாகவும் அவர் கூறினார். அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதன் அவசியம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்துவதாக மேத்யூ மில்லர் கூறினார்.

உலகில் உள்ள அனைவருக்கும் மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கையின் உரிமைக்கான உலகளாவிய மரியாதையை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளதாகவும், அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து இந்திய வெளியுறவுத் துறையுடன் உரையாடுவதாகவும் கூறினார்.

உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் ஆண்டுதோறும் காவடி யாத்திரை எனப்படும் கன்வர் யாத்திரை விமரிசையாக நடைபெறும். ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெறும். சிவ பக்தர்கள் அனைவரும் காவடி சுமந்து கங்கையில் நதியில் புனித நீராடுவதையே காவடி யாத்திரை என அழைக்கப்படுகிறது.

கங்கை நதியில் இருந்து தங்களது காவடியில் உள்ள பாத்திரங்களில் நீரை நிரப்பும் பக்தர்கள் அதை தங்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள சிவன் கோயில்களில் கும்பாபிஷேகம் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். நடப்பாண்டில் கன்வர் யாத்திரை வெகு விமரிசையாக தொடங்கிய நிலையில், கங்கை நோக்கி செல்லும் பக்கதர்களுக்காக, வழித்தடங்களில் உணவகங்கள் செயல்படுகின்றன.

யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள அனைத்து உணவகங்களின் பெயர் பலகைகளிலும், அதன் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்று இருக்க வேண்டும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் அரசும் அதை செயல்படுத்த உத்தரவிட்டது.

இதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஜூலை 22ஆம் தேதி பெயர் பலகை வைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை! டிஆர்டிஓ வெற்றி! - DRDO

ABOUT THE AUTHOR

...view details