ஹைதராபாத்:செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் மின் சக்தி தேவைக்காக அணு சக்தியை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கூகுள் கையெழுத்திட்டுள்ளதாக திங்கள் கிழமை செய்தி வெளியாகி உள்ளது.
சிறிய அளவிலான மாதிரி அணு உலைகளை நிறுவ உள்ள நிறுவனத்திடம் இருந்து கூகுள் நிறுவனம் அணு சக்தி மின்சாரத்தை பெற உள்ளது. கூகுளின் இந்த ஒப்பந்த த்துக்கு அணு சக்தி முறைமை இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. கூகுள் நிறுவனத்துக்காக மட்டுமே உருவாக்கப்படும் இந்த அணு உலைகள் இன்னும் கட்டமைக்கப்படவில்லை.அமெரிக்காவை சேர்ந்த கைரோஸ் பவர் என்ற ஸ்டார்ட் நிறுவனம் கூகுள் நிறுவனத்துக்காக அணு உலைகளை உருவாக்கி அணு மின்சாரம் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன் படி முதல் கட்ட அணு உலை 2030ஆம் ஆண்டு அமைக்கப்படும். கூடுதல் அணு உலைகள் 2035ஆம் ஆண்டு அமைக்கப்பட உள்ளன.