தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழப்பு! என்ன நடந்தது? - ஆஸ்திரேலியா இந்தியர்கள் உயிரிழப்பு

Four Indians Dead in Australia: ஆஸ்திரேலியாவில் 2 பெண்கள் உள்பட 4 இந்தியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Four Indians Dead in Australia
Four Indians Dead in Australia

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 2:04 PM IST

மெல்போர்ன் :ஆஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இரண்டு பெண்கள் உள்பட 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவில் கடந்த புதன்கிழமை இந்த மோசமான நிகழ்வு நிகழ்ந்ததாக ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்து உள்ளனர்.

விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவில் சிலர் கடலில் மூழ்கிய கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஆஸ்திரேலியா அவசர சேவைகள் பிரிவுக்கு தகவல் கிடைத்து உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் கடலில் மூழ்கி மயக்க நிலையில் இருந்தவர்களை மீட்பு அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் அனுமதித்து உள்ளனர்.

இதில் கடலில் மூழ்கிய இரண்டு பெண்கள் உள்பட 4 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் குறித்த அடையாளங்கள் வெளியிடப்படாத நிலையில், இதுகுறித்து விசாரித்து வருவதாக ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்து உள்ளனர். 4 பேரும் எப்படி உயிரிழந்தனர் என்பது மர்மமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக விக்டோரியா மாகாண கடற்பகுதியில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கான்பெராவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில், ஆஸ்திரேலியாவில் 4 இந்தியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்கும் வகையில் கிடைக்கப்பெற்றதாகவும், இந்த தருணத்தில் உயிருழந்தவர்களின் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :மீண்டும் பாஜகவில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர்! என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details