லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று (ஜனவரி 8) புதன்கிழமை திடீரென காட்டு தீ பரவ தொங்கியது. இது குறித்து பேசிய அதிகாரி, “இந்த காட்டுத்தீயில் இதுவரை 5 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 1,500 கட்டடங்களில் உள்ளவர்களை வீட்டில் இருந்து வெளியேற செய்துள்ளோம். இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக தீ பரவும் இடத்தில் இருந்து வெளியே வந்துள்ளனர். மேலும் இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாவட்ட தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்” என்றார்.
இது குறித்து பேசிய லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட தீயணைப்புத் தலைவர் அந்தோணி மர்ரோன், “நேற்று மாலை, ஹாலிவுட் பவுல்வர்டில் இருந்து சில நூறு மீட்டர் (யார்டுகள்) தொலைவில் உள்ள ஹாலிவுட் குன்றில் தீ ஏற்பட்டது. இந்த தீ பரவ தொடங்கியதால் தெருக்களுக்குள் குடியிருக்கும் மக்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:"பிணைக்கைதிகளை விடுவிக்காமல் இருப்பது ஹமாஸ் அமைப்புக்கு நல்லதல்ல"-டெனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை!
இந்நிலையில் இந்த வாரம் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள இருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யவதற்காக அந்த பயணத்தை ரத்து செய்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த தீ கட்டுக்குள் வருவதற்கான அனைத்து முயற்சிகளை நாங்கள் செய்து வருகிறோம்” என்று கூறினார்.
இது குறித்து பேசிய ஷரோன் இபாரா (29), “கடவுளுக்கு நன்றி நேற்று அதிக காற்று இல்லை, அதனால் தீயின் பரவல் தீவிரமாக இல்லை. பசிபிக் பாலிசேட்ஸ் சுற்றுப்புறத்தைச் சுற்றி மின்னல் வேகத்தில் தீ பரவியது" என்றார். மேலும் பேசிய லாஸ் ஏஞ்சல்ஸின் முக்கிய அதிகாரியான கவுண்டி ஷெரிப் பொறுப்பு வகிக்கும் ராபர்ட் லூனா, “காற்று மணிக்கு 100 மைல் (160 கிலோமீட்டர்) வேகத்தில் வீசியது. குறைந்தது 16,000 ஏக்கர் (6,500 ஹெக்டேர்) எரிந்தன, 1,000 வீடுகள் மற்றும் வணிகங்கள் எரிந்தன. நகரின் வடக்கே உள்ள அல்டடேனாவைச் சுற்றி 10,600 ஏக்கர் (4,300 ஹெக்டேர்) பரப்பளவில் தீ எரிந்தன” என்றார்.