தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பைடன் விலகல் சதி... சீனா, ரஷ்யா, வட கொரியா அதிபர்களுக்கு புகழாரம்- டிரம்ப் போடும் கணக்கு என்ன? - Donald Trump Elon Musk Interview - DONALD TRUMP ELON MUSK INTERVIEW

எக்ஸ் தளத்தின் அதிபர் எலான் மஸ்க்குடன் நேர்காணல் நடத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிபர் தேர்தல் ரேசில் இருந்து பைடன் வெளியேறியது திட்டமிட்ட சதி, தேர்தல் பிரசாரத்தி போது தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து மனம் திறந்தார்.

Etv Bharat
Elon Musk - Donald Trump (X/@elonmusk)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 11:38 AM IST

நியூ யார்க்:நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்கிற்கு நேர்காணல் அளித்தார். இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி அளவில் நேர்காணல் நடைபெற இருந்த நிலையில், எக்ஸ் தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தாமதமாக நடைபெற்றது.

ஏறத்தாழ 3 மணி நேரம் நேர்காணலில் பேசிய டிரம்ப், அமெரிக்காவின் ஐயர்ன் டோம் போர்க் கருவி, அதிபர் தேர்தல் ரேசில் இருந்து பைடன் விலகியது திட்டமிட்ட சதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்தில் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசிய டிரம்ப், தான் லேசாக தலையை திருப்பி இருக்காவிட்டால் இன்று இங்கு அமர்ந்து நேர்காணலில் பேசி இருக்க முடியாது என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் ரேசில் இருந்து ஜோ பைடன் விலகியது திட்டமிட்ட சதி என்றும், பலரின் வற்புறுத்தல் காரணமாகவே தேர்தல் ரேசில் இருந்து பைடன் விலகியது வேண்டியது ஏற்பட்டதாகவும் டிரம்ப் கூறினார். முன்னர் நடந்த விவாதத்தில் தனக்கும் பைடனும் இடையே ஏற்பட்ட காரசார மோதல் மற்றும் அதில் தனது கேள்விகளுக்கு பதிலளிக்க எடுத்துக் கொண்ட நேர தாமதம் உள்ளிட்டவைகளால் ஜனநாயக கட்சி கடும் அழுத்தத்திற்கு ஆளானதாக தெரிவித்தார்.

அந்த அழுத்தத்தின் காரணாமகவே ஜோ பைடன் அதிபர் ரேசில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறினார். தொடர்ந்து பேசிய டொனால்டு டிரம்ப், இஸ்ரேலை போன்று அமெரிக்காவிலும் வான்வழி தாக்குதல்களை தடுக்கக் கூடிய ஐயர் டோம் கருவிகள் பொருத்தப்படும் என்றும், முற்றிலும் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படும் போர் கருவிகள் வருங்காலத்தில் தேசத்தின் பாதுகாப்பை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழ்நிலைகள் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதாகவும், தான் அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் நடந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்காது என்றார். மேலும், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஒவ்வொருவரும் நம்பிக் கொண்டு இருக்கும் நிலையில் ஆனால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தவில்லை என்றும் டிரம்ப் கூறினார்.

மேலும், தன்னால் உக்ரைன் - ரஷ்யா போரை தடுத்து நிறுத்த முடியும் என்றும் திறமையான அதிபரால் அதை செய்து காட்ட முடியும் என்று டிரம்ப் தெரிவித்தார். உக்ரைன் மீதான அக்டோபர் 7 தாக்குதல் தான் அதிபராக இருந்திருந்தால் நடந்திருக்க இயலாது என்றும் அதை தான் தடுத்து இருப்பேன் என்றும் டிரம்ப் கூறினார்.

ரஷ்யா, சீனா மற்றும் வடகொரியா தலைவர்கள் தங்கள் நோக்கத்தின் உச்சியில் இருப்பதாகவும், அவர்களை சமாளிக்க அமெரிக்காவுக்கு வலுவான அதிபர் தேவை என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். விளாடிமிர் புதின், ஜி ஜின்பிங், கிம் ஜாங் உன் ஆகியோ பாராட்டிய டிரம்ப், சர்வாதிகாரிகள் என்று அடிக்கடி அழைக்கப்படும் இந்த தலைவர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள், ஆனால் அதுவும் அன்பின் ஒரு வடிவம் என்று அவர் கூறினார்.

பைடனை சுறுசுறுப்பு அற்றவர் என்று குறிப்பிட்ட டிரம்ப், பைடன் இல்லாவிட்டால் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்திருக்காது என்றும் கூறினார். தான் ரஷ்ய அதிபர் புதினுடன் கலந்துரையாடியதாகவும் இருவரும் பரஸ்பரம் தங்களுக்குள் மரியாதையை பகிர்ந்து கொண்டதாகவும் உக்ரைன் ஆக்கிரமிப்பு பற்றி இருவரும் பேசியதாகவும் டிரம்ப் கூறினார்.

அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேவை பாராட்டிய டொனால்ட் டிரம்ப் நாட்டின் கடன்களை திருப்பி செலுத்தும் செலவினங்களை குறைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஓய்வூதியத்தை 30 சதவீதம் வரை குறைத்தது மற்றும் 70 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுத்துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்ததை பாராட்டினார்.

இதையும் படிங்க:எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல்! டிரம்ப் - எலான் மஸ்க் நேர்காணலில் சிக்கல்! - Elon Musk Donald Trump Interview

ABOUT THE AUTHOR

...view details