அஸ்தானா:அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று அந்நாட்டின் தலைநகரான பாகு (BAKU) விலிருந்து , ரஷ்யாவின் க்ரோஸ்னி (Grozny) க்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் அவசர நிலை காரணமாக மேற்கு கஜகஸ்தானில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியதாக கஜகஸ்தான் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அஜர்பைஜான் அரசின் பொதுத்துறை விமான நிறுவனமான அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எம்ப்ரேர் (Embraer 190) என்ற விமானம் அகாடு (Akatu) என்ற இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் எண்ணெய் சுத்திகரிப்பு மையம் அருகே இருந்த காலி இடத்தில் , அவசரமாக தரையிறக்கப்பட்டதாக (emergency landing) கூறப்பட்டுள்ளது.