லாஸ் ஏஞ்சல்ஸ்:திரைத்துறையில் உயரிய விருதாக பார்க்கப்படுவது 'ஆஸ்கர் விருது'. கடந்த 1929ஆம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சிறந்த இயக்குநர், படம், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு 96வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டொல்பி தியேட்டரில் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆஸ்கர் விருது விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தரும் திரைப்பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், பல்வேறு பிரிவுகளில் திரைத்துரையினர் விருதுகளை வென்று வருகின்றனர். ஹாலிவுட் இயக்குநர் கிறஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் அதிகபட்சமாக 13 பிரிவுகளில் தேர்வாகி முன்னணியில் உள்ளது. அதைத்தொடர்ந்து புவர் திங்ஸ், கில்லர் ஆஃப் தி பிளவர் மூன் உள்ளிட்ட திரைப்படங்கள் விருதுகளை குவித்து வருகின்றன.
- சிறந்த அனிமேஷன் குறும்படம்
- லெட்டட் டு பிக் (Letter to a Pig)
- நைண்டி-ஃபைவ் சென்ஸ் (Ninety-Five Senses)
- அவர் யூனிஃபார்ம் (Our Uniform)
- பேச்சிடெர்ம் (Pachyderme)
- வார் இஸ் ஓவர்! இன்ஸ்பயர்டு பை தி மியூசிக் ஆஃப் ஜான் & யோகோ (War Is Over! Inspired by the Music of John & Yoko) (WINNER)
இதில்சிறந்த அனிமேசன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வார் இஸ் ஓவர்! இன்ஸ்பயர்டு பை தி மியூசிக் ஆஃப் ஜான் & யோகோ திரைப்படம் வென்றுள்ளது.
- சிறந்த ஆடை அலங்காரம்
- பார்பி (Barbie)
- கில்லர் ஆஃப் தி பிளவர் மூன் (Killers of the Flower Moon)
- நெப்போலியன் (Napoleon)
- ஓபன் ஹெய்மர் (Oppenheimer)
- புவர் திங்ஸ் (Poor Things) (WINNER)
இதில் சிறந்த ஆடை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது.
- சிறந்த துணை நடிகர்
- ஸ்டெர்லிங் கே.பிரவுன், அமெரிக்கன் ஃபிக்ஷன் (Sterling K.Brown, American Fiction)
- ராபர்ட் டி நீரோ, கில்லர் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Robert De Niro, Killers of the Flower Moon)
- ராபர்ட் டவுனி, ஓபன்ஹெய்மர் (Robert Downey Jr., Oppenheimer) (WINNER)
- ரியான் கோஸ்லிங், பார்பி (Ryan Gosling, Barbie)
- மார்க் ருஃபாலோ, புவர் திங்ஸ் (Mark Ruffalo, Poor Things)
இதில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஓபன்ஹெய்மர் (Oppenheimer)படத்திற்காக ராபர்ட் டவுனி வென்றுள்ளார்.
- சிறந்த துணை நடிகை
- எமிலி பிளண்ட், ஓபன்ஹெய்மர் (Emily Blunt, Oppenheimer)
- டேனியல் ப்ரூக்ஸ், தி கலர் பர்பில் (Danielle Brooks, The Color Purple)
- அமெரிக்கா ஃபெரெரா, பார்பி (America Ferrera, Barbie)
- ஜோடி ஃபாஸ்டர், நியாட் (Jodie Foster, Nyad)
- டாவின் ஜாய் ராண்டால்ஃப், தி ஹோல்ட் ஓவர் (Da’Vine Joy Randolph, The Holdovers(WINNER)
- சிறந்த அனிமேஷன் திரைப்படம்
- தி பாய் அண்ட் தி ஹெரோன் (The Boy and the Heron) (WINNER)
- எலிமென்டல் (Elemental)
- நிமோனா (Nimona)
- ரோபோட் ட்ரீம்ஸ் (Robot Dreams)
- ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் (Spider-Man: Across the Spider-Verse)
- சிறந்த திரைக்கதை
- ஜஸ்டின் ட்ரைட் அண்ட் ஆர்தர் ஹராரி, அனாடமி ஆஃப் ஃபால்(Justine Triet and Arthur Harari, Anatomy of a Fall)
- டேவிட் ஹெமிங்சன், தி ஹோல்டோவர்ஸ் (David Hemingson, The Holdovers)
- பிராட்லி கூப்பர் மற்றும் ஜோஷ் சிங்கர், மேஸ்ட்ரோ (Bradley Cooper and Josh Singer, Maestro)
- சேமி பர்ச், மே டிசம்பர் (Samy Burch, May December)
- செலின் சாங், பாஸ்ட் லைவ்ஸ் (Celine Song, Past Lives)
- சிறந்த தழுவல் திரைக்கதை
- கார்ட் ஜெபர்சன், அமெரிக்கன் ஃபிக்ஷன் (Cord Jefferson, American Fiction) (WINNER)
- கிரேட்டா கெர்விக் மற்றும் நோவா பாம்பாக், பார்பி (Greta Gerwig and Noah Baumbach, Barbie)
- டோனி மெக்னமரா, புவர் திங்ஸ் (Tony McNamara, Poor Things)
- கிறிஸ்டோபர் நோலன், ஓபன்ஹெய்மர் Christopher Nolan, Oppenheimer
- ஜொனாதன் கிளேசர், தி சோன் ஆஃப் இன்டெரஸ்ட் (Jonathan Glazer, The Zone of Interest)
- சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனை
- கோல்டா (Golda)
- மேஸ்ட்ரோ (Maestro)
- ஓபன்ஹெய்மர் (Oppenheimer)
- புவர் திங்ஸ் (Poor Things) (WINNER)
- சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ (Society of the Snow)
இதில் சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைக்கான ஆஸ்கர் விருதை புவர் திங்ஸ் திரைப்படம் (Poor Things) வென்றுள்ளது.
- சிறந்த திரைப்பட தயாரிப்பு வடிவமைப்பு
- பார்பி (Barbie)
- கில்லர் ஆஃப் தி பிளவர் மூன் (Killers of the Flower Moon)
- நெப்போலியன் (Napoleon)
- ஓபன் ஹெய்மர் (Oppenheimer)
- புவர் திங்ஸ் Poor Things (WINNER)
இதில் சிறந்த திரைப்பட தயாரிப்பு வடிவமைப்புக்கான (Best Production Design) ஆஸ்கர் விருதை புவர் திங்ஸ் திரைப்படம் வென்றுள்ளது.
- சிறந்த ஆடை அலங்காரம்
- பார்பி (Barbie)
- கில்லர் ஆஃப் தி பிளவர் மூன் (Killers of the Flower Moon)
- நெப்போலியன் (Napoleon)
- ஓபன் ஹெய்மர் (Oppenheimer)
- புவர் திங்ஸ் Poor Things (WINNER)
இதில் சிறந்த ஆடை அலங்காரத்திற்கான (Best Costume Designe) ஆஸ்கர் விருதை புவர் திங்ஸ் திரைப்படம் வென்றுள்ளது.
- சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Features)
- இயோ கேப்பிட்டனோ, இத்தாலி (Io Capitano, Italy)
- பெர்பெக்ட் டேஸ், ஜப்பான் (Perfect Days, Japan)
- சொசைடி ஆஃப் தி ஸ்னோ, ஸ்பெயின் (Society of the Snow, Spain)
- தி டீச்சர்ஸ் லோன்ங், ஜெர்மனி (The Teacher’s Lounge, Germany)
- தி சோன் ஆஃப் இன்ட்ரஸ்ட், இங்கிலாந்து (The Zone of Interest, United Kingdom) (WINNER)
இதில் சிறந்த சர்வதேச படத்திற்கான ஆஸ்கர் விருதை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தி சோன் ஆஃப் இன்ட்ரஸ்ட் (The Zone of Interest, United Kingdom) திரைப்படம் வென்றுள்ளது.
- சிறந்த காட்சி அமைப்பு (Best Visual Effects)
- தி கிரியேட்டர் (The Creator)
- காட்ஜில்லா மைனஸ் ஒன் (Godzilla Minus One) (WINNER)
- காட்டியன் ஆஃப் தி கேலக்சி-3 (Guardians of the Galaxy Vol. 3
- மிஷன் இம்பாசிபில்- டெட் ரெக்கானிங் பாகம் ஒன்று (Mission: Impossible—Dead Reckoning Part One)
- நெப்போலியன் (Napoleon)