சென்னை:தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு என்பது மிக முக்கியமான வாழ்வாதாரத்தில் ஒன்றாக உள்ளது. அதிலும், குறிப்பாக கிராமப்புறத்தை சேர்ந்த மக்கள் வீடுகளில் தங்கள் தேவைக்காக ஒரு பசுமாடாவது வைத்திருப்பார்கள். பலர் மாட்டு பண்ணைகளை வைத்தும் வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்த சூழல் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதீதமாக இருந்த நிலையில் வறட்சி மற்றும் இதனால் தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணத்தால் கோவை மாவட்டத்தின் மசினக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பசுக்கள் மற்றும் எருமைகள் உயிரிழந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பாலக்காட்டை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரான்சிஸிடம் கேட்டபோது, வெயில் மற்றும் அதனால் ஏற்படும் சூடு காரணத்தால் மனிதர்கள் எதிர்கொள்ளும் அனைத்து உடல்நல உபாதைகளும், கால்நடைகளுக்கும் ஏற்படும் என தெரிவித்தார். அதிலும் குறிப்பாக வெக்கை வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவும், கால்நடைகள் மிகுந்த சோர்வுடன் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
சூடு காரணமாக பாதிக்கப்பட்ட கால்நடைகளின் அறிகுறிகள்.!
- அதீத சூட்டின் தாக்கம் இருந்தால் கால்நடைகள் மூச்சு வாங்கும்
- உணவு உட்கொள்ளாது
- கண்கள் சிவந்து காணப்படும்
- கண்களில் நீர் வடியும்
- வாயில் எச்சில் வடிந்துகொண்டே இருக்கும்
- சிறுநீர் கழிப்பதில் குறைவு இருக்கும்
- தோலில் கொப்புளங்கள் வரலாம்